Cinema News
கோபிநயினாரை நம்பி மோசம் போனேன்!.. பணத்தை இழந்து கதறும் ஈழத்தமிழ் பெண்!. அட பாவமே!..
படம் தயாரிக்க ஆசைப்பட்டு பல லட்சங்களை இழந்த இலங்கையில் இருந்து வந்த ஒரு ஈழத்தமிழ் பெண்ணின் அழுகுரல் தான் இன்று ஒரு பெரிய ஹாட் டாப்பிக்காக இணையத்தில் மாறியுள்ளது. அந்த பெண்ணின் பெயர் சாய்மா. ஈழத்தமிழ் பெண்ணான அவர் புலம்பெயர்ந்து இப்போது ஃபிரான்சில் வசித்து வருகிறார். அவருக்கு சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசையாம். அதனால் தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் விஜய் அமிர்தராஜ் என்ற ஒருவரை சந்தித்திருக்கிறார்.
நம்பிக்கை மோசம்
இந்த விஜய் அமிர்தராஜ் நயன் நடித்த அறம் படத்தை இயக்கிய கோபி நயினாருக்கு அப்போது மேனேஜராக இருந்தவராம். இப்பொழுது ஆக்ஸ் புரடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு கம்பெனியை நடத்தி வருகிறாராம். இவரிடம் படம் தயாரிக்க ஆசை இருப்பதாகவும் தனக்கு உதவும் படியும் அந்த பெண் கேட்டுள்ளார். உடனே விஜய் அமிர்தராஜ் அறம் படம் பற்றியும் இயக்குனர் கோபி நயினார் பற்றியும் கூறி அவரை வைத்து படத்தை எடுக்கலாம் என்று நம்பிக்கை வார்த்தை கூறியுள்ளார்.
விஜய் அமிர்தராஜ் பேச்சை கேட்டு முதலில் அட்வான்ஸாக 5 லட்சத்தை கொடுத்திருக்கிறார் அந்த பெண். இன்னும் 30 லட்சம் கேட்டாராம் விஜய் அமிர்தராஜ். ஆனால் கோபி நயினாரை பார்த்த பிறகு தான் மீதி தொகையை கொடுப்பேன் என்று அந்தப் பெண் சொல்ல கோபி நயினாரை சந்திக்க ஏற்பாடு நடந்திருக்கிறது. அந்த சந்திப்பில் கோபி நயினார் நிறைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டாராம். மேலும் தலித் மக்களை பற்றியும் நிறைய பேசினாராம். அதனால் அவர் மீது இந்தப் பெண்ணுக்கு அதீத நம்பிக்கை வர 30 லட்சத்தை அக்ரிமெண்ட் செய்து தூக்கிக் கொடுத்திருக்கிறார்.
இங்குதான் பிரச்சினையே ஆரம்பம்
உடனடியாக படவேலைகள் எல்லாம் மும்முரமாக நடக்க ஆரம்பித்ததாம். படத்தில் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க மூன்று நாள் சூட்டிங் நடந்ததாம். அதற்குள் அந்த ஈழத்தமிழ் பெண் சொந்த ஊருக்கு போய்விட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்பி விட்டாராம். அதன் பிறகுதான் பிரச்சினையே ஆரம்பித்ததாம். அதாவது விஜய் அமிர்தராஜ் அந்தப் பெண்ணுக்கு தொலைபேசியில் சில பல பிரச்சினைகளால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் பயப்பட வேண்டாம் என்றும் பார்த்துக் கொள்கிறோம் என்றும் ஆறுதல் வார்த்தை கூறியிருக்கிறார்.
இருந்தாலும் படப்பிடிப்பு நடந்தபாடில்லையாம். உடனே இந்த பெண் என் பணத்தை திருப்பி கொடுத்து விடுங்கள் என்றும் நீங்கள் ஏமாத்துற மாதிரி தெரிகிறது என்றும் கூற அதற்கு விஜய் இல்லக்கா, படம் நடக்கும் என்றே கூறியிருக்கிறார். அதன் பிறகு இந்த பெண் விஜய்க்கு தொலைபேசியில் தொடர்புகொண்டால் ஆள் ஒழிந்து கொண்டாராம்.எந்தவித தொடர்பும் இல்லையாம். சென்னைக்கும் வந்தும் பார்த்திருக்கிறார். விஜய் அமிர்தராஜ் வீட்டை காலி செய்து விட்டே போய்விட்டாராம். அதனால் இதை பற்றி கமிஷனர் அலுவலகத்தில் அந்த பெண் புகார் செய்திருக்கிறார். இதற்கிடையில் கோபி நயினார் நேற்று நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் அந்த பெண்ணை எனக்கு தெரியாது என்றும் ஒரு இயக்குனர் என்ற முறையில் நிறைய பேர் என்னுடம் புகைப்படம் எடுக்க ஆசைப்படுவார்கள், அந்த வகையில் அவரும் வந்து என்னுடன் புகைப்படம் எடுத்திருப்பார் என்றும் கூறினார்.
தமிழர்களே ஏமாற்றினால் எப்படி
இதை பற்றி அந்த பெண்ணிடம் கேட்டபோது சரி அது இருக்கட்டும், யாரோ புகைப்படம் எடுக்க வருபவர்களிடம் எதற்கு மாலை அணிவித்து எல்லாம் புகைப்படம் எடுக்குறீங்க? அந்த சமயத்திலும் கோபி நயினார் என் அருகிலேயே தான் இருந்தார். அவர் சொல்வது எல்லாம் பொய் என்று அந்த பெண் கூறினார். கடைசியாக அந்த பெண் ‘தமிழர்களை நம்பித்தானே ஈழத்திலிருந்து வந்தோம், நீங்களே எங்களை ஏமாற்றலாமா? இனியும் இந்த மாதிரியான செய்லக்ளை செய்யாதீர்கள்’ என்று மிகவும் வருத்ததுடன் கூறினார்.
இதையும் படிங்க : என்னை ஏமாத்தி அவன் ஜாலியா இருந்தான்…அண்ணனுக்கே சம்பவம் செய்த ப்ரேம்ஜி!..