Connect with us
siluku

Cinema News

சிலுக்கு என் கன்னத்துல அடிச்சாங்க!. இறந்தப்ப சந்தோஷப்பட்டேன்!.. ஷாகிலா பகிர்ந்த பகீர் தகவல்..

தமிழ் சினிமாவில் ஐட்டம் சாங் என அழைக்கப்படும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களிடம் பிரபலமானவர் சில்க் ஸ்மிதா. 70,80 களில் பல படங்களில் நடனமாடி ரசிகர்களின் மனதில் கவர்ச்சி கன்னியாக குடியேறியவர். ரஜினி,கமல் போன்ற பெரிய நடிகர்களின் படத்தின் வெற்றிக்கு கூட சில்க் ஸ்மிதா தேவைப்பட்டார். சில படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் சில்க் ஸ்மிதா நடித்துள்ளார்.

silk3

silk3

அதேபோல், கேரளாவில் ஆபாச பட நடிகையாக இருந்தவர் ஷகிலா. பல படங்களில் ஆபாசமாக நடித்து மம்முட்டி மற்றும் மோகன்லால் படங்களுக்கே டஃப் கொடுத்தவர். தமிழிலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விதவிதமாக சமைத்து எல்லோருக்கும் அம்மாவாக மாறினார். மேலும், யுடியூப்பில் சர்ச்சையில் சிக்கிய பெண்களை அழைத்துவைத்து பேட்டியெடுத்து வருகிறார்.

shakila

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ஷகிலா ‘எனக்கு அப்போது 18 வயதுதான் இருக்கும். சில்க் ஸ்மிதா நடித்த ஒரு படத்தில் நான் நடித்தேன். கதைப்படி அவர் என்னை அறைய வேண்டும். லேசாக அறைவேன் என சொல்லிவிட்டு மிகவும் வேகமாக அறைந்தார். இதனால் கோபித்துகொண்டு அப்படத்திலிருந்து வெளியேறினேன்.

அவர் இறந்தவுடன் மிகவும் சந்தோசப்பட்டேன். அந்த வயதில் எனக்கு அந்த பக்குவம்தான் இருந்தது. ஆனால், இப்போது என் கோபம் முட்டாள்தனமானது என புரிகிறது. அவரே இறந்துவிட்டார். அவர் மீது அன்பு இல்லை என்றாலும் வெறுப்பை வளர்க்க கூடாது என்கிற பக்குவம் வந்துவிட்டது’ என அவர் பேசியுள்ளார்.

Continue Reading

More in Cinema News

To Top