பாக்கியராஜ் மனைவி இல்லன்னா நான் இல்ல!.. உண்மையை பகிர்த்த டிவி சீரியல் நடிகை…

Published on: June 21, 2023
---Advertisement---

தமிழில் 1979 ஆம் ஆண்டு வந்த சுவரில்லா சித்திரங்கள் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பாக்கியராஜ். சினிமாவில் அறிமுகமான நாள் தொட்டு பாக்யராஜ் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை கூறுவதாகவே இருக்கும். இதனால் குடும்ப ரசிகர்கள் மத்தியில் பாக்யராஜுக்கு நல்ல மதிப்பு இருந்தது.

அதிலும் அப்போது வந்த அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு போன்ற திரைப்படங்கள் பெரும் வரவேற்பை கொடுத்தன. அதனை தொடர்ந்து இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருப்பது போன்ற ஒரு வரவேற்பு அப்போது பாக்யராஜுக்கு இருந்தது.

bhagyaraj
bhagyaraj

பாக்யராஜ் இயக்கிய திரைப்படங்களில் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்த முக்கியமான திரைப்படம் முந்தானை முடிச்சு மற்றும் தாவணி கனவுகள். இந்த இரண்டு திரைப்படத்திலுமே நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சாதாரண ஆளாக பாக்யராஜ் நடித்திருப்பார்.

தாவணி கனவுகள் திரைப்படத்தில் படம் முழுக்கவும் முக்கியமாக மக்கள் மத்தியில் ரசிக்க வைக்கும் ஒரு கதாபாத்திரமாக பாக்யராஜின் கடைசி தங்கை கதாபாத்திரம் இருக்கும். அந்தப் படத்தில் சிவாஜி கணேசனில் துவங்கி பாக்கியராஜ் வரைக்கும் அனைவரையும் கிண்டல் அடிக்கும் ஒரு கதாபாத்திரமாக அந்த சிறுமியின் கதாபாத்திரம் இருக்கும்.

படத்தில் கிடைத்த வாய்ப்பு:

தற்சமயம் நாடகங்களில் நடித்து வரும் நடிகை பிரியதர்ஷினி நீலகண்டன் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த வயதிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ப்ரியதர்ஷினி. தற்சமயம் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகத்தில் ரேணுகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

priyadharshini
priyadharshini

இடையில் பாக்யராஜிடம் ஒரு பேட்டியில் இவர் பேசும்பொழுது அந்த படத்திற்கான வாய்ப்பை பூர்ணிமா பாக்யராஜ்தான் வாங்கி கொடுத்தார் என்பதை தெரிவித்திருந்தார். ஏதோ ஒரு சின்ன படத்திற்கான படப்பிடிப்பில் துணை கதாபாத்திரத்தில் பிரியதர்ஷினி நடித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரது நடிப்பை பார்த்த பூர்ணிமா பாக்யராஜின் திரைப்படத்திற்கு இந்த பெண் சரியாக இருப்பார் என்று அவர்தான் தாவணி கனவுகள் திரைப்படத்திற்கு பிரியதர்ஷினியை பரிந்துரை செய்துள்ளார்.

இதையும் படிங்க: விஜயின் மகளை இப்படியா பேசுறது? உனக்கு என்ன யோக்கியம் இருக்கு? குஷ்பூவை லெஃப்ட் ரைட் வாங்கிய பத்திரிக்கையாளர்

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.