விஜயின் மகளை இப்படியா பேசுறது? உனக்கு என்ன யோக்கியம் இருக்கு? குஷ்பூவை லெஃப்ட் ரைட் வாங்கிய பத்திரிக்கையாளர்

ஒரு பக்கம் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்தும் இன்னொரு பக்கம் குஷ்பு ஆவேசமாக பேசிய அந்த செய்திகள் குறித்தும் நாளுக்கு நாள் சர்ச்சைகள் கிளம்பி கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் திரை விமர்சகருமான வலைப்பேச்சு பிஸ்மி குஷ்பூ குறித்த கேள்விகளுக்கு தன் பேட்டி மூலமாக பதில் அளித்திருக்கிறார். அதாவது முதலில் பெண்களை குறித்து பேசுவதற்கு குஷ்புவிற்கு எந்த யோக்கியமும் இல்லை என்று பிஸ்மி கூறினார்.

kush1

kush1

உங்களுக்கு என்ன யோக்கியம் இருக்கு?

தமிழகத்தின் ஆளும் கட்சியில் இருக்கும் ஒரு மூன்றாம் தர பேச்சாளர் தன்னை பற்றி அவதூறாக பேசியதை தாங்க முடியாத குஷ்பு "என்ன சீண்டி பாக்காதீங்க, நான் திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க" என்று கோபமாக பேசிய குஷ்பூ பல நாட்களாக மல்யுத்த வீராங்கனைகள் நடத்திய போராட்டம் மட்டும் அவர் கண்களுக்கு தெரியவில்லையா? அவர்களும் பெண்கள்தானே? ஏன் அதைப் பற்றி ஒரு கேள்வியும் இன்றுவரை குஷ்பூ கேட்கவில்லை .ஒரு தேசிய மகளிர் ஆணைய தலைவராக இருந்து இப்படி குஷ்பூ செய்யலாமா என்ற பிஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் கலாஷேத்ராவில் பள்ளி மாணவிகளுக்கு நடந்த பாலியல் கொடுமைகளுக்கு எதிராக அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள் .அதைப்பற்றி கூட குஷ்பூ வாய் திறக்காமல் இருந்து விட்டார். ஆனால் இப்பொழுது அவரைப் பற்றி ஒருவர் தரக்குறைவாக பேசி விட்டார் என்பதற்காக இப்படி பொங்கி எழுவது என்பது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக தான் இருக்கிறது. ஆனால் அதற்காக அந்த நபரை நான் ஆதரிக்கவில்லை .அதுவும் கண்டிக்கத்தக்கது தான். இருந்தாலும் ஒரு தேசிய மகளிர் ஆணைய தலைவராக இருக்கும் குஷ்பூ எல்லாவற்றையும் சரி சமமாக தான் பார்க்க வேண்டும் என்றும் பிஸ்மி கூறினார்.

kush2

kush2

நீங்கள் பேசுவது மட்டும் சரிதானா?

இதில் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விஷயம் முதல் நாள் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பொங்கி எழுந்த குஷ்பூ மறுநாள் சமூக ஊடகத்தில் ஒருவர் குஷ்புவை பார்த்து "நீங்கள் பிஜேபியில் வந்து சேர்ந்ததற்கு காரணம், உங்கள் கணவர் சுந்தர் சி யின் கடனை அடைக்கத்தானே?" என்று கேட்டிருந்தார் .அதற்கு பதிலளித்த குஷ்பூ "அடி செருப்பால" என்று பதிலுக்கு கமெண்ட் போட்டதோடு அந்த நபரின் வீட்டில் இருக்கும் பெண்களைப் பற்றியும் கீழ் தரமாக குஷ்பூ பேசியிருந்தார்.

இதைப் பற்றி பேசிய பிஸ்மி "ஒரு வேளை இது உண்மை இல்லை என்றால் குஷ்பூ அந்த நபர் கேட்ட கேள்விக்கு ஆம் ,இல்லை என்றுதான் பதிலளித்திருக்க வேண்டும். ஏனெனில் முதலில் காங்கிரஸில் இருக்கும் போது மோடியை அந்த அளவுக்கு விமர்சித்த குஷ்பூ ஒரே நாளில் பிஜேபி பக்கம் சாய்ந்ததன் காரணம் ஏதோ ஒரு விதத்தில் அவருக்கு பிரதிபலன் கிடைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் தான் அவர் பிஜேபியின் சேர்ந்திருக்கிறார். இதைப்பற்றி தான் அந்த நபரும் கேட்டிருக்கிறார். அப்போ இது ஒரு விதத்தில் உண்மையாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று தானே எல்லோருக்கும் நினைக்கத் தோன்றும். அதை குஷ்பூ நிதானமாக கையாண்டு இருந்தால் இந்த மாதிரி கேள்விகள் எழுந்திருக்க வாய்ப்பிருக்காது" என்று பிஸ்மி கூறினார்.

kush3

kush3

விஜயின் மகளை இழிவுப்படுத்திய கட்சி

இதை எல்லாவற்றையும் தாண்டி பிஜேபி அண்ணாமலை சமீபத்தில் அவர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் உறுப்பினரை பாராட்டி இருந்தார். அந்தப் பெண் உறுப்பினர் ஏற்கனவே திராவிட கழகத்தையும் அதன் கொள்கைகளையும் பெரியார் அம்பேத்கர் கருத்துக்களையும் அவ்வப்போது இழிவு படுத்தி விமர்சனம் செய்யக் கூடியவர் .அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது. அவர் சமீபத்தில் தன்னுடைய சோசியல் பக்கத்தில் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதாவது பெரியார் கொள்கைகளை விஜய் பின்பற்றுங்கள் என்று சொல்வதில் இருந்து ஒரு வேளை அவருடைய மகளை விஜய் திருமணம் செய்வாரோ என்ற தொனியில் மிகவும் ஆபாசமாக பேசி இருந்தார். இதற்காக அண்ணாமலை அந்தப் பெண் உறுப்பினரை அழைத்து பாராட்டி இருந்தார்.

ஆனால் குஷ்பூ இதைப் பற்றி எதுவுமே வாய் திறக்கவில்லை. அரசியலுக்கும் அப்பாற்பட்டு ஒரு சக நடிகரின் மகளை இப்படி ஏன் பேசுகிறீர்கள் என்று கூட கேட்டிருக்கலாம் .குஷ்புவின் மகள் வயது தான் இருக்கும் விஜய்யின் மகளுக்கும் . இத்தனைக்கும் குஷ்புவிற்கு குடும்ப நண்பராகவே விஜய் இருக்கிறார். ஒரு குழந்தையை இப்படி ஆபாசமாக பேசுவதை அறிந்த குஷ்பு ஏன் இதைப்பற்றி கண்டு கொள்ளவே என்றும் பிஸ்மி ஆவேசமாக அந்த பேட்டியில் பேசினார்.

இதையும் படிங்க :வாலி வாய்ப்பு தராத மூன்று பேர்.. பின்னாளில் சினிமாவில் பெரிய பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா?…

மொத்தத்தில் குஷ்பூ அவர் கட்சியை சார்ந்த நலனுக்காக மட்டுமே பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். எத்தனையோ பெண்கள் குறித்த பிரச்சனைகள் நாள்தோறும் எழுந்த வண்ணம் தான் இருக்கின்றன. ஆனால் அதை எதைப்பற்றியும் குஷ்பூ கண்டுகொள்ளவே இல்லை என்று பிஸ்மி கூறினார்.

 

Related Articles

Next Story