Cinema History
கண்ணதாசனின் கடினமான வரிகளுக்கு ட்யூன் போட்ட எம்.எஸ்.வி!.. எம்.ஜி.ஆர் அடித்த செம கமெண்ட்!..
50,60,70 இசையுலகில் கொடிகட்டி பறந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். ராமமூர்த்தி என்பவருடன் இணைந்து இவர் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சில படங்களுக்கு அவர் மட்டும் தனியாகவும் இசையமைத்துள்ளார். இவருக்கு மெல்லிசை மன்னர் என்கிற பட்டமும் கொடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் காலத்தால் மறக்க முடியாத பாடல்களை எம்.எஸ்.வி இசையமைத்துள்ளார்.
எம்.எஸ்.வியின் பெரும்பாலான பாடல்களுக்கு கண்ணதாசனும், வாலியும் பாடல்களை எழுதியுள்ளனர். வாலியை விட கண்ணதாசனுக்கும், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் இடையே நல்ல புரிதலும், அன்பும் இருந்தது. ஒருமுறை கண்ணதாசன் ஒரு பாடலை எழுதி எம்.எஸ்.வி-யிடம் கொடுத்து ‘விசு.. நான் ஒரு பாட்டு எழுதிருக்கேன் அதுக்கு டியூன் போடு’ என சொல்ல, பாடல் வரிகளை படித்துப்பார்த்த எம்.எஸ்.விக்கு தலை சுற்றியது.
ஏனெனில் பல காய்கறிகளின் பெயர்களை எழுதி வைத்திருந்தார். ‘கவிஞரே.. எனக்கு சமைக்கவெல்லாம் தெரியாது. எதுக்கு காய்கறி பேரா எழுதி வச்சிருக்கீங்க?’ எனக்கேட்க, கண்ணதாசனோ ‘இதெல்லாம் சொல்லாத!. நீ பெரிய மியூசிக் டைரக்டர்னா இதுக்கு மியூசிக் போடு’ என சொல்லிவிட்டு போய்விட்டாராம். அதன்பின் அதையே சவாலாக எடுத்துக்கொண்டு எம்.எஸ்.வி கண்ணதாசனின் வரிகளுக்கு இசையமைத்தார். தனது வரிகளுக்கு எம்.எஸ்.வி போட்ட டியூனை கேட்டு கண்ணதாசன் மிகவும் பாராட்டினாராம்.
அந்த பாடல்தான் ‘அத்திக்காய்.. காய். காய் ஆலங்காய் வெண்ணிலவே’ பாடல். இந்த பாடல் சிவாஜி, தேவிகா நடித்த ‘பலே பாண்டியா’ படத்தில் இடம் பெற்றது. அதன்பின் எம்.எஸ்.வி கலந்து கொண்ட ஒரு சினிமா விழாவில் பேசிய எம்.ஜி.ஆர் ‘எல்லோரும் எம்.எஸ்.வி-யிடம் ஜாக்கிரதையா இருங்க.. தந்தி பேப்பரை கையில் கொடுத்தா கூட அவர் டியூன் போட்டு கொடுத்து விடுகிறார். சமீபத்தில்தான் ‘அத்திக்காய்’ பாடலை கேட்டு அசந்து போனேன்’ என பாராட்டி பேசினாராம்.