Cinema History
ரேப் சீனுக்காகவே ஒரு பாடலா? திக்குமுக்காடிய எம்.எஸ்.வி! என்ன பண்ணியிருப்பார்?
அந்தக் காலத்தில் இசைத்துறையில் கொடி கட்டி பறந்தவரில் குறிப்பிடத்தக்கவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களின் படங்கள் வெற்றி பெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்தது இவருடைய இசையில் வந்த பாடல்களும்தான்.
இன்றைய காலகட்டம் மாதிரி அப்பொழுது இருந்திருக்க வாய்ப்பு இருக்காது. அந்த காலத்தில் ஒரு நட்புறவுடனும் அந்யோன்யமாகவும் நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து எல்லோருக்கும் பிடித்தமான ஒரு இசையை வரவழைத்து அதன் மூலமாகத்தான் பாடல்களை ரெக்கார்ட் செய்வார்கள்.
அதில் ஒரு நல்ல திருப்தி ஏற்படும். அதே வேளையில் எல்லோருக்கும் பிடித்தமான அளவில் ஒரு பாடல் வெளிவந்தால் அது கேட்கவும் ஒரு வித மன நிம்மதியை தரும். அந்த வகையில் எம்.எஸ்.வி இசையில் அமைந்த அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.
இரட்டையர்கள் என கருதப்பட்ட எம்எஸ்வி, ராமமூர்த்தி ஆகிய இருவருமே இசை துறையில் பெரிய ஜாம்பவான்களாக உருவெடுத்து இருந்தனர். அதன் பிறகு இருவரும் பிரிந்து தனித்தனியாக இசை அமைக்க தொடங்கினர். ஆனால் அந்த இருவரில் எம்எஸ்வி மட்டும் ஒரு பெரிய ஆளுமையாக வலம் வந்தார்.
இந்த நிலையில் அவருடைய மகனான பிரகாஷ் அவருடைய நினைவுகளை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதாவது எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கே. பாலச்சந்தர் இவருடைய படங்களில் பணியாற்றும் போது மட்டும் ஒரு வித தயக்கமும் பயமும் இருக்குமாம். கே பாலச்சந்தர் பெரும்பாலும் கிளைமாக்ஸ் காட்சியில் டிவிஸ்ட் வைத்திருப்பாராம். சில சமயங்களில் வசனமே இல்லாமல் அந்த கிளைமேக்ஸ் இருக்கும் பட்சத்தில் அந்த காட்சி முழுவதையும் ரீ ரெக்கார்டிங்கில் கொண்டு போகிற மாதிரி வடிவமைத்திருப்பாராம்.
அது எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஒரு சேலஞ்ச் ஆகவும் இருக்குமாம். மேலும் பயமாகவும் இருக்குமாம். அதற்கு ஒரு சின்ன உதாரணமாக புன்னகை என்ற படத்தில் அமைந்த சம்பவத்தை அவருடைய மகன் பகிர்ந்திருந்தார். அந்தப் படத்தில் ‘ஆணையிட்டேன் நெருங்காதே’ என்ற ஒரு பாடல் வரும். அந்தப் பாடல் ரேப் சீன் சம்பந்தப்பட்டது.
எந்த ஒரு சூழ்நிலைக்கும் இசையமைக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனை ஒரு ரேப் சீனுக்காக இசையமைக்க சொன்னாராம் பாலச்சந்தர். ரேப் சீனுக்காக ஒரு பாடலா என்று தயங்கிய எம்எஸ் விஸ்வநாதன் அந்த நேரத்தில் மட்டும் கொஞ்சம் பயந்து கொண்டே தான் அந்தப் பாட்டை இசையமைத்தாராம்.
இதையும் படிங்க : என் அடுத்த படத்திற்கு இவர்தான் ஹீரோ!.. ரஜினியை டீலில் விட்ட லோகேஷ் கனகராஜ்…