Connect with us
lokesh

Cinema News

என் அடுத்த படத்திற்கு இவர்தான் ஹீரோ!.. ரஜினியை டீலில் விட்ட லோகேஷ் கனகராஜ்…

முதல் படமான ‘மாநகரம்’ திரைப்படம் மூலம் கவனிக்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். பல படங்களை இயக்கிய அனுபவமுள்ள இயக்குனர் போல் அப்படத்தை இயக்கியிருந்தார். அடுத்து கார்த்தியை வைத்து அவர் இயக்கிய ‘கைதி’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. ஒரு இரவுக்குள் நடக்கும் கதை, கைதி ஒருவன் உயர் போலீஸ் அதிகாரிகளை காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை.

Lokesh Kanagaraj

Lokesh Kanagaraj

ஆனால், தன்னுடையை ஸ்டைலில் திரைக்கதை அமைத்து அசத்தியிருந்தார். அதன்பின் விஜயை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியிருந்தார். அப்படமும் சூப்பர் ஹிட். அதன்பின் கமலை வைத்து அவர் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படம் ரூ.500 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. லோக்கி யூனிவர்ஸ் என ரசிகர்கள் பெயர் வைக்கும் அளவுக்கு ஒரு புதிய உலகத்தை காணும் அனுபவத்தை அவரின் படங்கள் கொடுத்தது.

leo

இப்போது விஜயை வைத்து ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அவரின் வழக்கமான கேங்ஸ்டர் பட ஸ்டைலிலேயே உருவாகி வருகிறது. இப்படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு பின் அவரின் இயக்கத்தில் எந்த ஹீரோ நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

prabhas_main

ஒருபக்கம் ரஜினியின் அவர் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அவர் தெலுங்கு நடிகர் பிரபாஸை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ‘இந்த படம் எங்களின் இருவரின் கேரியலும் மிகப்பெரிய படமாக இருக்கும்’ எனவும் தெரிவித்துள்ளார். ஹீரோ பிரபாஸ் என்பதால் இப்படம் பேன் இண்டியா படமாக உருவாகும் என கணிக்கப்படுகிறது.

ரஜினி அடுத்து ‘ஜெய்பீம்’ பட இயக்குனரின் படத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். எனவே, அந்த படத்தை முடித்தபின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top