பப்புக்கு லுங்கியோடு வந்த கவுண்டமணி! ‘மேட்டுக்குடி’ பட சூட்டிங்கில் நடந்த காமெடியான சம்பவம்
Goundamani: தமிழ் சினிமாவின் ஒரு நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி. தன்னுடைய எதார்த்தமான நகைச்சுவை நடிப்பால் மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்தவர். அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை காமெடியாக சொல்வதில் சிறந்தவர்.அதிலும் குறிப்பாக அரசியலில் நடக்கும் விஷயங்களை அசால்ட்டாக காமெடியாக மக்களுக்கு படங்களின் மூலம் சொன்னவர்.
இவரும் தனக்கென தனியாக ரசிகர் மன்றம் வைக்க வேண்டாம் என்று இதுநாள் வரை ரசிகர் மன்றமே இல்லாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் மேட்டுக்குடி படத்தில் நக்மாவுடன் ஆடிய சம்பவம் குறித்து சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அந்த நேரத்தில் ஹீரோக்கு மட்டும்தான் நடிகையுடன் டூயட் வாய்ப்பு கொடுப்பீங்களா? எங்களுக்கெல்லாம் கொடுக்க மாட்டீங்களா என கேட்டவர் கவுண்டமணி.
இதையும் படிங்க: சாதனை செய்த கமல்ஹாசன்!. விழாவுக்கு வர மறுத்த பிரபல நடிகர்!.. அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்!…
அதை மேட்டுக்குடி படத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டார். ‘லேலக்கு லேலக்கு லே’ என்ற பாடலில் நக்மாவுடன் டூயட் ஆடி இருப்பார் கவுண்டமணி. அந்த படத்தின் போது மைக்கேல் ஜாக்சன் உடை அணிந்து ஸ்பாட்டுக்கு வந்திருந்தாராம். அதை பார்த்ததும் நக்மா இது யாரு கவுண்டமணியா? அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என கேட்டிருக்கிறார்.
அதுவரை நக்மாவுக்கு தன்னுடன் தான் ஆடப்போகிறார் என தெரியாதாம். அதன் பிறகு சுந்தரி சி சொல்ல ஷாக் ஆகிவிட்டாராம் நக்மா. இருந்தாலும் முழு ஒத்துழைப்புடன் பாடலுக்கு கவுண்டமணியுடன் ஆடினராம் நக்மா. அது மட்டுமில்லாமல் அந்த படத்தின் முக்கால்வாசி காட்சிகள் கோவாவில் தான் நடைபெற்றதாம். அப்போது அங்கு டிஸ்கோதேவுக்கு சுந்தர் சி, கார்த்திக் இவர்கள் எல்லாம் செல்வார்களாம்.
இதையும் படிங்க:பயோபிக் ட்ரெண்ட் தொடங்கிட்டாங்களோ… ரஜினிகாந்த் எடுத்திருக்கும் திடீர் முடிவு?
அங்கு அவர்களுடன் கவுண்டமணி லுங்கியுடன் வந்தாராம். அதை பார்த்ததும் கார்த்திக் அட என்ன இது காஸ்டியூம்? என கேட்டிருக்கிறார். அதற்கு கவுண்டமணி அவருடைய பாணியில் ‘அட விடுப்பா இது நம்ம ஊரு டிரஸ் என அவங்க நினைத்துக் கொள்வார்கள்’ என உள்ளே போனாராம். இந்த மாதிரி படப்பிடிப்பு போக கவுண்டமணியின் அட்டகாசங்கள் நிறையவே இருக்கிறது என சுந்தர் சி கூறினார்.