பயோபிக் ட்ரெண்ட் தொடங்கிட்டாங்களோ… ரஜினிகாந்த் எடுத்திருக்கும் திடீர் முடிவு?

Rajinikanth: தமிழ் சினிமாவில் பயோபிக் ட்ரெண்ட் தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம். அந்த வகையில் தற்போது ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தகவல்கள் தெரிவிக்கிறது.

கோலிவுட்டில் பயோபிக் இதுவரை பெரிய அளவில் ஹிட் கொடுத்தது இல்லை. ஜெயலலிதாவின் தலைவி, பாரதி, காமராஜர் பயோபிக் என அனைத்துமே பெரிய அளவில் வரவேற்பை பெறவே இல்லை. 'ஏர் டெக்கான்' ஏர்லைன்ஸின் நிறுவனரான கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சூரரைப் போற்று நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: பெண்கள் கல்லூரியில் அந்த வேஷத்தில் சென்ற விவேக்… காலேஜில் அவர் செய்த அட்டூழியங்கள்.

இதை தொடர்ந்து தற்போது இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருக்கிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருக்கிறார். இளையராஜா இசையமைக்க இருக்கிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முடிவில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கிறது.

83, கிக் படங்களை இயக்கிய பிரபல தயாரிப்பாளரும், எழுத்தாளருமான சாஜித் நாடியாட்வாலா கதையை எழுத இருக்கிறார். கதையை மொத்தமாக முடித்த பின்னரே அதை படமாக்கும் முடிவு குறித்த அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி படமாக்கப்பட்டால் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாகி பெரிய அளவில் ரீச் கிடைக்கும் என்றே தகவல்கள் கிசுகிசுக்கிறது. மற்ற தகவல்கள் இன்னும் முடிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கொடுத்த எம்.பி. பதவியை ஏற்க மறுத்த நடிகை!.. இதுதான் காரணமா?..

இதற்கு முன்னரே ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்க்கையை புத்தமாக எழுதி வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதுகுறித்து பாலசந்தர் ஒருமுறை அவரிடம் கேட்ட போது, வரலாற்றை எழுதினால் அதில் முழுவதும் உண்மை இருக்க வேண்டும். அந்த தைரியம் தனக்கு இல்லை எனவும் ரஜினிகாந்த் நேரடியாகவே கூறி இருந்தார்.

 

Related Articles

Next Story