பெண்கள் கல்லூரியில் அந்த வேஷத்தில் சென்ற விவேக்… காலேஜில் அவர் செய்த அட்டூழியங்கள்.

by Akhilan |
பெண்கள் கல்லூரியில் அந்த வேஷத்தில் சென்ற விவேக்… காலேஜில் அவர் செய்த அட்டூழியங்கள்.
X

Vivek: சின்ன கலைவாணர் விவேக் எப்போதுமே கலகலப்பான ஆள். தன்னுடன் இருப்பவர்களை சிரிக்க வைத்து அசரடிப்பார். அப்படி ஒரு போட்டிக்காக அவர் செய்த ஆச்சரியமான விஷயம் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விவேக் நன்றாக படிக்க கூடியவராம். ஆனால் அவர் நண்பர்கள் சரியாக படிக்காமல் இருப்பார்களாம். இதனால் நண்பர்களை அழைத்துக்கொண்டு இரவு தமுக்கம் மைதானம் சென்று தெரு விளக்கில் விடிய விடிய பாடம் எடுப்பாராம். நடிகர் விவேக் மதுரையில் அவர் படித்த கல்லூரிக்கு எப்போது போனாலும் சென்று விடும் பழக்கம் இருந்ததாம்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பட போஸ்டர்களை கிழிக்க சொன்ன ரஜினி!.. பதறிய தயாரிப்பாளர்!.. அப்படி என்ன கோபம்!..

எப்போதுமே பாசிட்டிவிட்டியுடன் பேசும் பழக்கம் கொண்டவர் விவேக். நண்பர்களிடம் வருத்தப்பட்டு புலம்பியதே இல்லையாம். அதனால் அவரை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அவ்வளவு பிடிக்குமாம். வகுப்பறையில் சேட்டை செய்தால் கூட கண்டுக்காமல் கடந்து விடுவார்களாம்.

தன் கல்லூரியில் மட்டுமல்லாமல் போட்டிக்கு போன கல்லூரியில் கூட ஒரு சேட்டை செய்து இருக்கிறார். மதுரையில் உள்ள புகழ்பெற்ற பெண்கள் கல்லூரிக்கு சிறு நாடக போட்டிக்காக விவேக் செல்ல வேண்டும். அங்கு செல்ல தன்னுடைய வீட்டில் இருந்தே பாவடை, தாவணி அணிந்து அழகிய பெண் வேடத்தில் சென்றாராம்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கொடுத்த எம்.பி. பதவியை ஏற்க மறுத்த நடிகை!.. இதுதான் காரணமா?..

Next Story