எம்.ஜி.ஆர் கொடுத்த எம்.பி. பதவியை ஏற்க மறுத்த நடிகை!.. இதுதான் காரணமா?..
கன்னடத்து பைங்கிளியாக சினிமாவில் நுழைந்தவர் சரோஜா தேவி. ஜெயலலிதாவை போல எம்.ஜி.ஆரின் அதிக படங்களில் நடித்தவர். இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதாவை விட மிகவும் அதிகமான படங்களில் இவர் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடி போலவே திரையில் எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி ஜோடியும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
இவர்கள் இருவரும் இணைந்து எல்லா படங்களுமே வெற்றிப்படங்கள்தான். இப்போதெல்லாம் ஒரு நடிகர் ஒரு படத்தில் ஒரு கதாநாயகியுடன் நடித்தால் ரசிகர்களுக்கு போரடித்துவிடும் என நினைத்து அடுத்த படத்தில் வேறு நடிகையுடன் ஜோடி போடுவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் இதற்கு விதிவிலக்கு. தொடர்ந்து ஒரே நடிகையுடன் நடிப்பார்.
இதையும் படிங்க: இதெல்லாம் செட் ஆகாது!.. சினிமா உலகம் சொன்ன புகார்!.. ஆனா ஹிட் கொடுத்து ட்ரீட் கொடுத்த எம்.ஜி.ஆர்..
அதற்கு காரணம் அவரின் படங்கள் ஓடுவதே எம்.ஜி.ஆருக்காக மட்டுமே. அவரின் முகத்திற்காகத்தான். எம்.ஜி.ஆருடன் படகோட்டி, அன்பே வா, எங்க வீட்டு பிள்ளை, நான் ஆணையிட்டால், தர்மம் தலை காக்கும், காவல்காரன் என பல திரைப்படங்களிலும் சரோஜா தேவி நடித்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் ஒரு படத்தில் நடிக்கும்போது சரோஜாதேவிக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. எனவே, சரோஜாதேவியிடம் பேசுவதை நிறுத்திவிட்டார் எம்.ஜி.ஆர். அவரிடம் எதாவது சொல்ல வேண்டுமெனில் உதவியாளர்களிடம் சொல்லி அனுப்புவார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பட போஸ்டர்களை கிழிக்க சொன்ன ரஜினி!.. பதறிய தயாரிப்பாளர்!.. அப்படி என்ன கோபம்!..
சரோஜாதேவி திருமணம் செய்து கொண்டு செட்டிலான பின் மற்ற நடிகைகளுடன் நடித்து வந்தார் எம்.ஜி.ஆர். அப்போது, சரோஜாதேவியின் கணவர் இறந்த செய்தி கேள்விப்பட்டு மனைவி ஜானகியுடன் பெங்களூர் சென்று அவருக்கு ஆறுதல் சொன்னார். அப்போது, இது மிகவும் கஷ்டமான சூழ்நிலை. உனக்கு ஆறுதல் சொல்ல முடியாது.
ஆனால், இதே எண்ணத்தில் நீ இருக்கக் கூடாது. நீ அரசியலுக்கு வா. பொதுவாழ்க்கையில் உன் கவனம் திரும்பினால் உனது சோகம் மறையும். உனக்கு மேல் சபை எம்.பி. பதவி வாங்கி தருகிறேன் என சொன்னார் எம்.ஜி.ஆர். ஆனால், இப்போது அதில் எனக்கு விருப்பமில்லை. நான் முதலில் இதிலிருந்து வெளியே வருகிறேன். பின்னர் அரசியல் பற்றி யோசிக்கிறேன்’ என சொல்லிவிட்டார் சரோஜாதேவி.