இதெல்லாம் செட் ஆகாது!.. சினிமா உலகம் சொன்ன புகார்!.. ஆனா ஹிட் கொடுத்து ட்ரீட் கொடுத்த எம்.ஜி.ஆர்..

by சிவா |
mgr
X

எம்.ஜி.ஆரை வைத்து மிக அதிகமான திரைப்படங்களை தயாரித்தவர் சின்னப்ப தேவர். இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தவர்கள். எம்.ஜி.ஆர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தவர் தேவர். ஆனாலும், ‘தாய்க்கு பின் தாரம்’ படம் உருவான போது அவர்கள் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

அதன்பின் எம்.ஜி.ஆர் இல்லாமல் மற்ற நடிகர்களை போட்டு படங்களை தயாரித்து வந்தார் சின்னப்ப தேவர். சில வருடங்களில் ‘தாய் சொல்லை தட்டாதே’ என்கிற படம் மூலம் அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு முன்பே எம்.ஜி.ஆர் சில வெற்றிகளை பார்த்திருந்தாலும் இந்த படத்தின் வெற்றி அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

இதையும் படிங்க: ஹீரோ மட்டுமில்லை.. வில்லனாகவும் கலக்கிய எம்.ஜி.ஆர்!.. ஒரு ஆச்சர்ய தகவல்

அதற்கு காரணம் அப்போது எம்.ஜி.ஆர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் இருந்தது. ஒன்று, அவர் சரியாக படப்பிடிப்பில் கலந்துகொண்டு படத்தை முடித்து கொடுக்க மாட்டார். இன்னொறு, அவர் நடிப்பில் சரித்திர படங்கள் மட்டுமே ஓடும். சமூக கதை கொண்ட படங்கள் ஓடாது என்பதுதான்.

thai sollai

எனவே, இந்த படம் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஆசைப்பட்டார் எம்.ஜி.ஆர். ஆரூர்தாஸ் கதை, வசனம் எழுத எம்.ஏ.திருமுகம் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி நடித்திருந்தார். மேலும், அசோகன், எம்.ஆர்.ராதா, கண்ணாம்பாள் என பலரும் நடித்து 1961ம் வருடம் இப்படம் வெளியானது.

இதையும் படிங்க: அந்த குற்றவாளியுடன் நான் இருப்பதா? எம்.ஜி.ஆர் தவிர்த்து அசிங்கப்படுத்திய பிரபல இயக்குனர்…

இந்த படம் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியடைந்த எம்.ஜி.ஆர் அப்படத்தின் இயக்குனர் திருமுகம், வசனம் எழுதிய ஆருர்தாஸ் மற்றும் பாடல்களை எழுதிய கண்ணதாசன் ஆகிய மூவருக்கும் சென்னையில் உள்ள உட்லண்ட் ஹோட்டலில் ஒரு சிறப்பான விருந்து கொடுத்தார்.

எம்.ஜி.ஆருக்கு சமூக படங்கள் ஓடும் என்கிற நம்பிக்கை கொடுத்தது இந்த படம்தான். அதேபோல், இந்த படம் ஓடாமல் போயிருந்தால் தொடர்ந்து சின்னப்ப தேவரின் படங்களில் எம்.ஜி.ஆர் நடித்திருக்கவும் வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story