ஹீரோ மட்டுமில்லை.. வில்லனாகவும் கலக்கிய எம்.ஜி.ஆர்!.. ஒரு ஆச்சர்ய தகவல்

by sankaran v |   ( Updated:2024-04-29 04:49:16  )
MGR24
X

MGR24

மக்கள் திலகம் எம்ஜிஆர் தனது படங்களில் எப்போதுமே சில கொள்கைகளை வைத்திருப்பார். புகைபிடிப்பது, மதுப்பழக்கம், பொம்பள ஷோக்கு என எதுவுமே இருக்காது. அதனால் தான் மக்கள் மத்தியில் அவருக்கு எப்போதும் தனியிடம், தனி அந்தஸ்து, தனி மரியாதை என எல்லாமே இருந்து வந்தது.

ஏழைகளுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளலான எம்ஜிஆர் எதைச் செய்தாலும் அது நல்லதாகவே இருக்கும் என்பது மக்களின் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அதனால் தான் அவர் மறைந்தும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

இன்று வரைக்கும் எம்ஜிஆரின் படங்கள் என்றாலே ரசிகர்கள் பேரார்வத்தோடு தான் திரையரங்கிற்குச் செல்கிறார்கள். அவர் மறைந்தாலும் அவரது புகழ் எப்போதும் மாறாமல் இருக்கும்.

இதையும் படிங்க... நேத்து ராத்திரி யம்மா!.. நீச்சல் குளத்தில் கீர்த்தி சுரேஷ் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க!..

எம்ஜிஆரின் படங்கள் என்றாலே எப்போதும் சமுதாயத்திற்குத் தேவையான பல நல்ல கருத்துகளும், நீதிகளும் சொல்லப்பட்டு இருக்கும். அவர் பேசும் வசனங்கள் எல்லாமே தத்துவமயமாகவே இருக்கும். இது எக்காலத்திற்கும் எத்தகைய மனிதர்களுக்கும் பொருந்தக்கூடியனவாக இருக்கும்.

அதே போல அவருடைய படங்களில் பெரும்பாலும் நெகடிவ் கேரக்டர்களை ஏற்று நடிக்கவே மாட்டார். அப்படி என்றால் அவர் சில படங்களில் நடித்துள்ளார். அவை என்னென்ன என பிரபல தயாரிப்பாளரும், சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணன் இவ்வாறு சொல்கிறார்.

Ninaithathai Mudippavan

Ninaithathai Mudippavan

எம்ஜிஆர் ஆரம்ப காலகட்டத்தில் சாலிவாஹனன், பணக்காரி படங்களில் நெகடிவ் கேரக்டரில் நடித்துள்ளார். அவர் கதாநாயகனாக வளர்ந்த பிறகு நெகடிவ் கேரக்டரில் நடித்த படம் நினைத்ததை முடிப்பவன். இதில் அவருக்கு இரட்டை வேடம். இதில் மற்றொரு கேரக்டர் பாசிடிவாக இருக்கும். இவ்வாறு அவர் வாசகர் ஒருவரின் கேள்விக்குப் பதில் அளித்துள்ளார்.

இப்போது அவரது படங்கள் திரையிட்டால் கூட திரையரங்கையே கோவிலாக மாற்றி விடுவார்கள் ரசிகர்கள். ஆம் எம்ஜிஆர் திரையில் தோன்றியதும் அவருக்குத் தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டி, சூடத்தைக் கையில் ஏந்தும் அதி தீவிர ரசிகர்களையும் நாம் கண்கூடாகக் காணலாம். அப்படி என்றால் புரட்சித்திலகம் எம்ஜிஆர் எந்தளவுக்கு மக்களின் மனதில் இடம் பிடித்து இருப்பார் என்று நீங்களே எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Next Story