Cinema History
மன்னிப்பு கேட்க சொன்ன எம்.ஜி.ஆர்.. வீம்பாக மறுத்த உதவியாளர்!.. அப்புறம் என்னாச்சி தெரியுமா?..
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படமான ராஜகுமாரிக்கு வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. மேலும், எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான அபிமன்யூ, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி ஆகிய படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார். எனவே, எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. அண்ணாவின் பேச்சில் ஈர்க்கப்பட்டு தன்னை திமுகவிலும் எம்.ஜி.ஆர் இணைத்துக்கொண்ட பின் கருணாநிதியுடனான நட்பு மேலும் நெருக்கமானது.
அரசியல்ரீதியாகவும் இருவரும் இணைந்து செயல்பட்டனர். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு கருணாநிதி நீக்கிவிட எம்.ஜி.ஆர் அதிமுக என்கிற கட்சியை உருவாக்கி முதலமைச்சராகவும் மாறினார். இது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால், கருணாநிதியை பிரிந்தபின்னரும் அவர் மீது அன்பும், மரியாதையையும் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார். அவருக்கு உரியை மரியாதையை எல்லா இடத்திலும் கொடுத்தார்.
இதையும் படிங்க: நான் உயிரோடதான் இருக்கேன்!.. ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க!.. சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை உருக்கம்..
சட்டசபையில் கருணாநிதி எதிர்கட்சி தலைவராக இருக்கும்போது கூட அவரை பற்றி அசிங்கமாகவோ, அவதூறாகவோ யாரையும் பேச எம்.ஜி.ஆர் அனுமதித்தது கிடையாது. யாராவது மொட்டையாக கருணாநிதி என பேசினால், ‘அப்படி சொல்லக்கூடாது.. கலைஞர் என சொல்லுங்கள்’ என சொல்வார். ஒருமுறை காரில் அவர் சென்று கொண்டிருந்த போது அவருடன் சென்றவர் கலைஞரை பற்றி அவதுறாக பேச காரை நிறுத்த சொல்லி அவரை கீழே இறக்கிவிட்டு சென்றவர்தான் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரிடம் பல வருடங்கள் உதவியாளராக இருந்தவர் ரவீந்தர். இவர் திரைப்படங்களுக்கு வசனமும் எழுதுவார். இவர் ஒருமுறை ஒரு மேடையில் ‘கருணாநிதி நல்ல வசனகர்த்தா மட்டுமே.. கதாசிரியர் கிடையாது’ என பேசி விட்டார். இதனால் கோபமடைந்த எம்.ஜி.ஆர் அவரை அழைத்து ‘கலைஞரிடம் சென்று மன்னிப்பு கேள்’ என சொல்ல, ரவீந்தரோ முடியாது என மறுத்துவிட்டார். ‘அப்படியெனில் வீட்டை விட்டு போய்விடு’ என எம்.ஜி.ஆர் சொல்ல, ரவீந்தரும் போய்வீட்டார். அடுத்தநாளே நாடோடி மன்னன் படத்தின் விளம்பரம் தந்தி பேப்பரில் வெளியானது. அதில், வசனம் கண்ணதாசன் என இருந்தது. இதைப்பார்த்து ரவீந்தர் வேதனைப்பட்டாலும் வீம்பாக இருந்தார். இப்படியே ஒரு மாதம் போனது.
இதற்கிடையில், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகிக்கு இது பிடிக்கவில்லை. ‘ரவீந்தரை ஏன் அனுப்பினீர்கள்?’ என எம்.ஜி.ஆரை திட்டி வந்துள்ளார். ஒருநாள் எம்.ஜி.ஆரின் சகோதரர் சக்கரபாணி ரவீந்தரை அழைத்து ‘ராமச்சந்திரன் உன்னை கூப்பிடுகிறான்.. போய் பார்’ என சொல்ல ரவீந்தர் எம்.ஜி.ஆரிடம் சென்றார். எம்.ஜி.ஆர் அவரிடம் ‘போ என சொன்னால் மொத்தமாக போய்விடுவதா?.. உன்னை அனுப்பிவிட்டு ஜானகியிடம் திட்டு வாங்கினேன். நீ மீண்டும் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்க்கு எழுத வேண்டும்’ என சொன்னார். ரவீந்தரும் தன்னுடைய வேலையை துவங்கினார்.
இதையும் படிங்க: சரோஜாதேவிக்கு எமனாக வந்த எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஜோடி!.. எல்லா வாய்ப்பும் போச்சி!…