எல்லா பொண்ணுக்கும் பிடிக்கும் அந்த விஷயம்.. ஆனா அமலாவிற்கு பிடிக்காதாம்!.. காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவிங்க!..

Published on: July 4, 2023
---Advertisement---

பொதுவாக தமிழ் சினிமாவில் நடிகைகள் வெகு காலத்திற்கு நிலைத்து நிற்பதில்லை. குறைந்த காலங்களை அவர்கள் சினிமாவில் பிரபலமாக இருப்பார்கள்.

அதற்குப் பிறகு திடீரென காணாமல் போய்விடுவார்கள். இப்போதைய காலகட்டத்தில் நடிகைகளுக்கு போட்டி என்பது அதிகமாக இருக்கிறது. எனவே ஒரு நடிகை இரண்டு மூன்று படங்களுக்கு பிறகு காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் ரஜினி கமல் காலகட்டத்தில் அந்த போட்டி சற்று குறைவாகவே இருந்தது.

actress amala
actress amala

இதையும் படிங்க:ஜனகராஜ் வாழ்க்கையில் ஒளியேற்றிய இயக்குனர் யார் தெரியுமா..! – பார்க்கலாமா?..

அப்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அமலா. ரஜினி, கமல், கார்த்தி, சத்யராஜ் என அப்போது இருந்த பல முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக அவர் நடித்தார்.

 

அப்போது நடிகைகளுக்கு போட்டி குறைவாக இருந்த காரணத்தினால் அமலா தொடர்ந்து 10 வருடங்கள் நடிகையாக இருந்தார். இதற்கிடையே அவர் தெலுங்கிலும் நடிக்க துவங்கினார். தெலுங்கில் நடிக்க தொடங்கியபோது நடிகர் நாகார்ஜுனாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது பிறகு நாகார்ஜுனாவை அவர் திருமணமும் செய்து கொண்டார்.

இதையும் படிங்க:இரவு முழுவதும் காரிலேயே தூங்கிய ரஜினி!.. கொதித்தெழுந்த பி.வாசு.. அந்த அட்வைஸ்தான் ஹைலைட்!..

பேட்டி ஒன்றில் அவர் பேசும்பொழுது அவர் பட்டுப்புடவையை எப்போதும் கட்டுவதில்லை என கூறியிருந்தார், அதற்கான காரணத்தை அவர் கூறும் பொழுது மிகவும் வியப்பாக இருந்தது. உயிர்களிடத்தில் மிகவும் ஜீவகாருண்யம் பார்ப்பவராக அமலா இருக்கிறார்.

அதனால் அசைவ உணவு கூட அவர் உண்ண மாட்டார். இந்த நிலையில் பல பட்டு புழுக்களை கொன்றுதான் ஒரு பட்டுப் புடவை உருவாகுகிறது. எனவே அதை நான் உடுத்துவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் உயிர்களை பாதிக்கும்படி இருக்கும் எந்த ஒரு விஷயத்தையும் செய்வதில்லை என்று அவர் கூறியுள்ளார். ஹைதராபாத் ப்ளூ கிராஸ் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் அமலா..

இதையும் படிங்க:தள்ளாடுற வயசுல துள்ளி ஆட ஆசை! டிவி நடிகையிடம் உல்லாசமாக இருந்த அரசியல் பிரபலம்

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.