தண்ணியடிக்க வேண்டியது!. அப்புறம் கற்பு போச்சுன்னு அழ வேண்டியது- 2கே பெண்களை விளாசும் ரேகா நாயர்!..

Published on: July 5, 2023
rekha nair
---Advertisement---

சின்னத்திரை என்பது எப்போதுமே நடிகர்கள் நடிகைகள் பலரையும் உருவாக்கியுள்ளது. சிவகார்த்திகேயன் சந்தானத்தில் துவங்கி பல நடிகர்கள் நடிகைகள் தமிழ் சினிமாவில் வருவதற்கு சின்னத்திரை முக்கிய காரணமாக இருந்துள்ளது.

இதனால் இப்பொழுது சின்னத்திரைக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பலரும் சின்னத்திரையில் நடித்த சினிமாவிற்கு வரலாம் என்பதால் சின்ன திரையில் நடிக்க துவங்கியுள்ளனர். அப்படியாக சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை ரேகா நாயர்.

rekha nair
rekha nair

இதையும் படிங்க:அடுத்த இசை வாரிசுனு இளையராஜா சொன்னது சரிதான்! கார்த்திக்ராஜா இசையில் இவ்ளோ சூப்பரான பாடல்களா?

நடிகை ரேகா நாயர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வந்தார் தற்சமயம் திரைப்படங்களில் வாய்ப்பை பெற்று வருகிறார். ஆனால் திரைப்படங்களில் வாய்ப்பை பெறுவதற்குள் அவர் பல இடங்களில் மோசமான நிகழ்வுகளை சந்திக்க நேர்ந்தது.

2கே கிட்ஸ்களை வெளுத்த ரேகா நாயர்:

அவற்றையெல்லாம் தற்சமயம் தனது பேட்டிகளில் அவர் கூறி வருகிறார் ஒருமுறை பேட்டி ஒன்றில் கூறும் பொழுது இயக்குனர் ஒருவர் லாட்ஜில் ரூம் போட்டால்தான் வாய்ப்பு தருவேன் என கூறியதாக கூறியிருந்தார்.

Rekha-Nair
Rekha-Nair

இதையும் படிங்க:அடுத்த படம் தளபதி கூடவா? புது அப்டேட் கொடுத்த அதிதி ஷங்கர்!..

அதேபோல தற்சமயம் பெண்களின் சுதந்திரம் குறித்து பேசும்பொழுது பெண்கள் சுதந்திரம் பெற வேண்டும் எனக் கூறி அதிகபட்சமான தவறுகளை செய்ய துவங்கி விட்டனர். தண்ணி அடிக்கிறார்கள் வெளியில் சென்று ஊர் சுற்றுகிறார்கள் கவர்ச்சியான ஆடைகளை அணிகிறார்கள். பிறகு அதனால் தூண்டப்படும் ஆண்கள் தவறு செய்யும் பொழுது கர்ப்பை இழந்துவிட்டேன் என அழுகிறார்கள்.

எனவே ஒரு விஷயத்தை செய்யும் பொழுது அதற்கான தைரியம் அவர்களுக்கு இருக்க வேண்டும். தவறாகவே இருந்தாலும் அதை செய்வதற்கான தைரியம் இருந்தால் அதை செய்ய வேண்டும். பிறகு செய்துவிட்டு தவறு செய்து விட்டேன் என அழுவது சரி கிடையாது என்று கூறியுள்ளார் ரேகா நாயர்.

இதையும் படிங்க:இந்த கம்பெனியில எப்படியாவது நடிக்கணும்!.. ரஜினிக்கு இருந்த தீரா ஆசை.. அதுக்கு காரணம் இதுதான்!…

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.