Connect with us

Cinema News

அடுத்த படம் தளபதி கூடவா? புது அப்டேட் கொடுத்த அதிதி ஷங்கர்!..

தற்சமயம் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் முக்கியமானவராக இருக்கிறார் நடிகை அதிதி ஷங்கர். கதாநாயகிகளுக்கு முதல் படத்தில் வரவேற்பு கிடைத்தாலே அதனை தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்புகளும் கிடைத்துவிடும். என்னதான் இயக்குனர் ஷங்கரின் மகளாக இருந்தாலும் அவரை முதலில் சங்கர் அறிமுகப்படுத்தவில்லை.

தனது மகள் மார்டன் கதாநாயகியாக வலம் வருவதை ஷங்கர் விரும்பவில்லை. எனவே கலாச்சார பெண்ணாக அவரை அறிமுகப்படுத்த நினைத்தார். இயக்குனர் முத்தையா தனது திரைப்படங்களில் கதாநாயகிகளை கொஞ்சம் சரியாக காட்ட கூடியவர்.

aditi shankar

aditi shankar

இதையும் படிங்க:இந்த கம்பெனியில எப்படியாவது நடிக்கணும்!.. ரஜினிக்கு இருந்த தீரா ஆசை.. அதுக்கு காரணம் இதுதான்!…

எனவே அவரது படத்தின் மூலம் அதிதி ஷங்கரை அறிமுகப்படுத்தலாம் என நினைத்தார் ஷங்கர். எனவே கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் மூலமாக அறிமுகமானார் அதிதி ஷங்கர். முதல் படமே அதிதி ஷங்கருக்கு பெரும் ரசிக வட்டாரத்தை உருவாக்கி கொடுத்தது.

aditi shankar1

aditi shankar1

அதனை தொடர்ந்து தற்சமயம் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அதிதி சங்கர். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அவரிடம் பேசும்போது ஏற்கனவே கார்த்தி, சிவகார்த்திகேயன் என பெரிய நடிகர்களுடன் நடித்து விட்டீர்கள், அடுத்து தளபதி கூட எப்போது நடிக்க போகிறீர்கள்? என கேட்கப்பட்டது.

இதையும் படிங்க:இப்படியெல்லாமா ஆசைப்பட்டார்? வரப்போகும் மனைவி குறித்து ரஜினி போட்டுவைத்த மனக்கணக்கு

அதற்கு பதிலளித்த அதிதி ஷங்கர், எனது அடுத்த படத்திற்கு இயக்குனர் விஷ்ணுவர்தனோடு இணைந்து பணியாற்றி வருகிறேன். ஏற்கனவே கொஞ்சம் ஷூட்டிங்கும் முடிந்துள்ளது என கூறியுள்ளார். இன்னும் அந்த படம் குறித்து இயக்குனரே எந்த அப்டேட்டும் தராத நிலையில் முதல் அப்டேட்டை அதிதி ஷங்கர் தந்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top