ஃபிளாப் படம் கொடுத்த பெரிய இயக்குனர்கள்!. தயாரிப்பாளர் தலையில் துண்டு போட்ட 5 படங்கள்..

Published on: July 5, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவில் பெரும் ஹிட் கொடுத்த இயக்குனர்கள் பலர் உள்ளனர் என்னதான் அவர்கள் அனைவரும் நிறைய ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும் கூட யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல சில படுதோல்வி திரைப்படங்களையும் அவர்கள் கொடுத்துள்ளனர். அப்படியான ஒரு ஐந்து படங்களை இப்பொழுது பார்க்க போகிறோம்.

நாயகன்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் நாயகன். இப்போது வரை மக்களால் வெகுவாக கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் என்றாலும் வெளியான காலகட்டத்தில் நாயகன் எதிர்பார்த்த அளவு பெரிய வசூலை கொடுக்கவில்லை.

nayagan_poster
nayagan_poster

மேலும் அந்தப் படத்தை எடுப்பதற்கு தேவைப்பட்டதை விடவும் அதிகமான செலவை செய்திருந்தார் மணிரத்தினம். இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் தோல்வியை ஏற்படுத்திக் கொடுத்தது நாயகன் திரைப்படம்.

இதையும் படிங்க:துப்பாக்கி காட்டி ஷங்கரை மிரட்டிய தயாரிப்பாளர்.. பரிதாப நிலைக்குபோய் அவரிடமே வாய்ப்பு கேட்ட சோகம்..

ஆயிரத்தில் ஒருவன்

நாயகன் போலவே வெளியாகி பல வருடங்கள் கழித்து கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம்தான் கார்த்தி, பார்த்திபன் நடித்து வெளியான ஆயிரத்தில் ஒருவன். இந்த திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி இருந்தார்.

aayirathil oruvan
aayirathil oruvan

இந்த படத்திற்கு அப்பொழுது அதிகமான செலவு செய்து படத்தை எடுத்திருந்தார் செல்வராகவன். அந்த அளவிற்கு படத்திற்கு கிராபிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் தேவைப்பட்டன. ஆனால் வெளியான திரைப்படம் போட்ட காசை கூட வசூல் செய்து தரவில்லை. இதனால் செல்வராகவனின் தோல்வி திரைப்படமாக ஆயிரத்தில் ஒருவன் பார்க்கப்படுகிறது.

பாய்ஸ்

boys
boys

நடிகர் சித்தார்த்திற்கு அறிமுக படமாக தமிழில் வெளியான திரைப்படம் பாய்ஸ். தமிழில் பல பெரும் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஷங்கர் இயக்கிய திரைப்படம் பாய்ஸ் என்பது ஒரு அதிர்ச்சி தகவல் என்று கூறலாம். ஏனெனில் பொதுவாக சங்கர் திரைப்படங்களில் இருக்கும் எந்த ஒரு அம்சமும் பாய்ஸ் திரைப்படத்தில் இருக்காது. பாடல்களில் அதிக செலவுகள் மட்டும் செய்யப்பட்டிருக்கும். பாய்ஸ் திரைப்படம் சங்கர் எடுத்த திரைப்படங்களிலேயே பெரும் தோல்வியை கொடுத்த ஒரு திரைப்படம் ஆகும்.

இதையும் படிங்க:என்னடா கேமியோ? அஜித் படத்தில் அப்பவே கலக்கிய கமல் – தூசி தட்டி எடுத்தாச்சுல

தாரை தப்பட்டை

thaarai thappatai
thaarai thappatai

இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்து உருவான திரைப்படம் தாரை தப்பட்ட சில விருதுகளை இந்த படம் பெற்றிருந்தாலும் கூட வசூல் ரீதியாக எந்த ஒரு லாபத்தையும் பெற்று தரவில்லை. இது இயக்குனர் சசிக்குமாருக்கும் பெரிய அடியாக இருந்தது. ஏனெனில் அந்த படத்தின் தயாரிப்பாளராக அவர்தான் இருந்தார். அந்தப் படத்தின் தோல்விக்கு பிறகு சொந்த ஊருக்கே திரும்பச் சென்ற சசிகுமார் பல வருடங்கள் கழித்தே திரும்ப சினிமாவிற்கு வந்தார்.

லிங்கா

lingaa-poster-2
lingaa-poster-2

தமிழ் இயக்குனர்களில் கமல், ரஜினி என இருவரையும் வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் கே.எஸ் ரவிக்குமார். இவர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் லிங்கா. சூப்பர் ஸ்டாராகவே இருந்தாலும் மக்களுக்கு பிடிக்காத படம் தமிழ் சினிமாவில் ஓடாது என்பதை மீண்டும் நிரூபித்த படம் லிங்கா என கூறலாம்.

அந்த அளவிற்கு படத்தில் காமெடி முதல் சண்டை காட்சிகள் வரை எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை என்பது மக்களின் கருத்தாக இருந்தது. கே. எஸ் ரவிக்குமார் பெரிய ஹீரோக்களை வைத்து எடுத்த படத்தில் பெரும் தோல்வியை கொடுத்த படம் லிங்கா.

இதையும் படிங்க:தண்ணியடிக்க வேண்டியது!. அப்புறம் கற்பு போச்சுன்னு அழ வேண்டியது- 2கே பெண்களை விளாசும் ரேகா நாயர்!..

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.