ஒரு தடவ, ரெண்டு தடவ இல்ல!. மூன்று முறை பிரசாந்திடம் மண்ணை கவ்விய விஜய்!..

Published on: July 5, 2023
Vijay
---Advertisement---

மூன்று முறை பிரசாந்தின் படத்தோடு தாக்குப் பிடிக்க முடியாமல் தோல்வியடைந்த நடிகர் விஜய்..!!

நடிகர் விஜய்: தற்சமயம் கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டங்களில் நிறைய சருக்கல்களை சந்தித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்கு பிறகு தான் அவரால் தனது இடத்தை தக்க வைக்க முடிந்தது. அதிலும் 90களில் நடிகர் பிரசாந்துடன் நிறைய திரைப்படங்களில் நேருக்கு நேர் மோதி தோல்வியை சந்தித்தார்.அவர் தோல்வியை சந்தித்த திரைப்படங்கள் என்னென்ன திரைப்படங்கள் என்று பார்ப்போம் வாருங்கள்.

Ninaithen vandhai
Ninaithen vandhai

விஜய் நினைத்தேன் வந்தாய் எனும் திரைப்படத்தில் ரம்பா மற்றும் தேவயானி போன்ற மாபெரும் உச்ச நடிகர்களுடன் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகும் நேரத்தில் தான் நடிகர் பிரசாந்தின் ஜீன்ஸ் என்னும் திரைப்படம் வெளியாயிருந்தது இந்த படம் அதிக பொருள் செலவில் இயக்குனர் சங்கர் டைரக்ஷனில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். இந்த நிலையில் நினைத்தேன் வந்தாய் திரைப்படம் ஜீன்ஸ் திரைப்படத்துடன் ஒப்பிடும்போது இந்த படம் அதிக வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படமாக அமைந்தது. இதனால் நினைத்தேன் வந்தாய் திரைப்படம் தோல்வி படமாக அந்த சமயத்தில் அமைந்தது.

Jeans
Jeans

இதனை அடுத்து 1998 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய நிலவே வா எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் கதை வெவ்வேறு மதத்தைச் சார்ந்த காதலர்கள் எப்படி கடைசியில் ஒன்று சேர்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்தப் படம் ரிலீஸ் ஆன அதே நேரத்தில் தான் பிரசாந்தின் கண்ணெதிரே தோன்றினாள் எனும் திரைப்படம் வெளியானது. நிலவே வா திரைப்படத்தைப் போல இந்த திரைப்படமும் காதலையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆக அமைந்தது. இருந்தாலும் நிலவே வா திரைப்படத்தை விட இந்த படத்தின் கதைக்களம் அனைத்து மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றதனால் இந்தப் படத்திலும் நடிகர் விஜய் பிரசாந்த் இடம் தோல்வியை சந்தித்தார்.

Nilave va
Nilave va

இந்த நிலையில் மீண்டும் 1999 ஆம் ஆண்டு மின்சார கண்ணா எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார்.இந்த படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் இயக்கியிருந்தார்கள். இந்த படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான குஷ்பூ, மோனிகா, ரம்பா போன்ற நடிகைகளின் நடித்திருந்தார்கள். இந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு மக்களிடையே கிடைக்கவில்லை. இந்த படம் ரிலீஸ் ஆன அதே நேரத்தில் தான் நடிகர் பிரசாந்தின் ஜோடி திரைப்படமும் வெளியாயிருந்தது. இந்தப் படம் மாபெரும் வெற்றி படமாக தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆதலால் இந்தப் படத்திலும் நடிகர் விஜய் நடிகர் பிரசாந்துடன் தோல்வியை சந்தித்தார்.

Minsara kanna
Minsara kanna

இப்படி தமிழ் சினிமாவில் தற்சமயம் உச்சம் பெற்ற நடிகர்களில் ஒருவராக திகழும் விஜய் ஆரம்ப காலங்களில் நடிகர் பிரசாந்துடன் நிறைய தோல்வி படங்களை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

prakash kumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.