Cinema News
ஒரு வருஷத்துல இவ்வளவு வருமானமா!.. கோடிகளில் புரளும் அனிருத்!.. செம மச்சம்தான்!..
அறிமுகம்:
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த ரவிச்சந்திரனின் மகன்தான் அனிருத். கல்லூரியில் படிக்கும்போதே இசையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் கவனம் செலுத்தினார். இவர் ரஜினியின் உறவினரும் கூட. அதனால், தனுஷுடன் நெருக்கமாகி அவர் நடித்த படங்களுக்கு இசையமைக்க துவங்கினார். தனுஷுடன் அவர் இணைந்து உருவாக்கிய ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. இதன் மூலமே அனிருத் எல்லோரிடமும் பிரபலமானார்.
அதன்பின் தனுஷுன் படங்களுக்கு இசையமைக்க துவங்கினார். பல ஹிட் பாடல்களை கொடுத்தார். ஏ.ஆர்.ரஹ்மான் அதிக படங்களுக்கு அதிக இசையமைக்காத இடைவெளியை அனிருத் பயன்படுத்தி கொண்டார். அப்படியே சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நெருக்கமாகி அவர்களின் படங்களுக்கும் இசையமைத்தார்.
இதையும் படிங்க: என்னத்த பானையை உருட்டினாலும் ஷேப்புக்கு வரமாட்டுங்குது! ஓரங்கட்டப்படுவாரா VP? தளபதி 68ல் என்னதான் பிரச்சினை?
நம்பர் ஒன் இசையமைப்பாளர்:
ஒருகட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராக மாறி விஜயின் படங்களுக்கும் இசையமைக்க துவங்கினார். மாஸ்டர், பீஸ்ட் மற்றும் ரஜினியின் பேட்ட, தர்பார் ஆகிய படங்களுக்கும் இசையமைத்தார். இப்போது உருவாகி வரும் லியோ, இந்தியன் 2, ஜெயிலர் என பெரிய படங்கள் எல்லாவற்றுக்கும் அனிருத்தின் இசைதான். ஒருபக்கம், வெளிநாடுகளுக்கு சென்று இசை கச்சேரிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார். அதேபோல், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘திவான்’ படத்திற்கும் அனிருத்துதான் இசை.
பல கோடி வருமானம்:
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இசை நிகழ்ச்சி மற்றும் சினிமா மூலம் ரூ.100 கோடி அனிருத் வருமானம் ஈட்டியிருக்கலாம் என விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
அனிருத்தின் சீனியர்களான ஏ.ஆர்.ரஹ்மானும், இளையராஜாவும் கூட இவ்வளவு சம்பாத்திருக்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: நோ பார்ட்டி! நோ ப்யூட்டி – தனுஷின் திடீர் மாற்றத்திற்கு இதுதான் காரணமா?