தமிழ் சினிமாவில் 80களில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அப்பா இயக்குனர் என்பதால் விஜய்க்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை வர அடம்பிடித்து நடிகராக மாறினார். துவக்கத்தில் விஜயை வைத்து படம் எடுக்க யாரும் முன்வரவில்லை. எனவே, எஸ்.ஏ.சி சொந்தமாக படம் தயாரித்து விஜயை அறிமுகம் செய்தார். நான்கைந்து படங்கள் நடித்தும் விஜயை வைத்து படம் எடுக்க புது தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை.

அதோடு, விஜயின் படங்களும் பெரிதாக ஓடவில்லை. எனவே, பெரிய நடிகர்களுடன் விஜய் நடித்தால் அவர் மக்களிடம் ரீச் ஆவார் என கணக்குப்போட்டு விஜயகாந்திடம் சென்று விஜய்க்கு அண்ணனாக நீங்கள் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். தன்னை ஹீரோ ஆக்கிய இயக்குனர் என்பதால் விஜயகாந்த் உடனே ஒப்புக்கொண்டார். அப்படி உருவான திரைப்படம்தான் ‘செந்தூர பாண்டி’. இப்படத்தில் விஜயகாந்தின் தம்பியாக விஜய் நடித்திருப்பார். விஜயகாந்த் நடித்ததால் இப்படம் வெற்றிபெற்றது.
இதையும் படிங்க: அந்த மாதிரி எந்த ஹீரோவும் செய்யமாட்டான்!.. இம்பாசிபிள்!. கமலை பாராட்டி தள்ளிய பாரதிராஜா…

இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய பட்டிமன்றம் திண்டுக்கல் லியோனி ‘செந்தூரப்பாண்டி படத்தின் 100வது நாள் விழாவில் எஸ்.ஏ.சி என்னை வைத்து ஒரு பட்டி மன்றம் நடத்தினார். ‘செந்தூரப்பாண்டி படத்தின் வெற்றிக்கு காரணம் காதலா? வீரமா?’ என்பதுதான் தலைப்பு.

வீரம் என்றால் விஜயகாந்த்.. காதல் என்றால் விஜய்.. பட்டிமன்றம் துவங்குவதற்கு முன்பு என்னிடம் வந்த எஸ்.ஏ.சி ‘வீரம் என நீங்கள் தீர்ப்பு சொன்னால் என் மகன் விஜய் ஃபீல் பண்ணுவான்.. காதல் எனவும் சொல்ல வேண்டாம். ஏனெனில், விஜயகாந்த் எனக்காக இப்படத்தில் நடித்து கொடுத்துள்ளார். எனவே, இரண்டையும் மிக்ஸ் பன்ணி ஒரு தீர்ப்பு சொல்லுங்க’ என கேட்டார். அவர் சொன்னது மாதிரியே தீர்ப்பை சொல்லிவிட்டேன்’ என லியோனி பேசியிருந்தார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை கைவிட்ட திரையுலகம்!.. துணிந்து இறங்கிய தயாரிப்பாளர்.. நட்புன்னா இதுதான்!…
