Connect with us
aravinda swamy

Cinema History

சீண்டிவிட்ட சினிமா உலகம்!.. வீம்புக்கு நடித்து பல்பு வாங்கிய அரவிந்த சாமி…

ரஜினி, மம்முட்டி நடித்து மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் மாவட்ட கலெக்டராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த சாமி. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானதோடு, இளம் பெண்களின் கனவு நாயகனாகவுன் மாறினார். தனக்கு ஒரு காதலரோ, கணவரோ இருந்தால் அரவிந்த சாமி போல அழகாக இருக்க வேண்டும் என பெண்களை ஆசைப்படவைத்தார்.

இதையும் படிங்க: இத்தனை ஆயிரம் கோடி சொத்தா?!.. விபத்தில் சிக்கியும் சாதித்து காட்டிய அரவிந்த் சாமி!..

தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஒருபக்கம் அப்பா பார்த்து வந்த தொழிலையும் கவனித்துக்கொண்டார். இவர் மீது ஒரு விமர்சனம் எழுந்தது. அரவிந்த சாமி சிட்டி சப்ஜெக்ட் என சொல்லப்படும் நகரம் சார்ந்த கதைகளில் நடிக்க மட்டுமே பொருத்தமாக இருப்பார். அவரால் கிராமபுற கதைகளில் நடிக்க முடியாது என சினிமா உலகை சேர்ந்த சிலர் பேச, இது அரவிந்த சாமி காதுக்கு போகிறது.

aravinda

அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு ‘தாலாட்டு’ என்கிற படத்தில் நடிக்க முடிவு செய்தார். இது முழுக்க முழுக்க கிராமம் சார்ந்த கதை. சின்னத்தம்பி படத்திற்கு பின் ஹீரோக்கள் அமாஞ்சியாக அதாவது ஒன்று தெரியாத அப்பாவி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். கார்த்திக் கூட சின்ன ஜமீன் படத்தில் அப்படி நடித்திருந்தார். தாலாட்டு படத்திலும் அரவிந்தசாமிக்கு அது போன்ற வேடம்தான். சின்ன ஜமீன் கதை போலவே அவர் அப்பா, அம்மா இல்லாத அநாதையாக ஜாலியாக கிராமத்தை சுற்றி கொண்டு, பாட்டு பாடிக்கொண்டு வாழ்ந்து வரும் ஒரு கிராமத்து வாலிபராக அப்படத்தில் நடித்திருந்தார்.

thalattu

டி.கே.ராஜேந்திரன் என்பவர் இயக்கிய இந்த படத்தில் சுகன்யா, சிவரஞ்சனி, கவுண்டமணி, கோவை சரளா, மன்சூர் அலிகான் என பலரும் நடித்திருந்தனர். 1993ம் வருடம் வெளியான இந்த படம் தோல்வி அடைந்தது. ஏனெனில், அரவிந்த சாமியை கிராமத்து வாலிபராக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவிலை. அதுவே அப்படத்தின் தோல்விக்கு காரணமாக இருந்தது.

இதை புரிந்து கொண்ட அரவிந்த சாமி அதன்பின் கிராமபுற கதைகளில் நடிக்கவில்லை. அதேநேரம், சுஹாசினி இயக்கி வெளிவந்த இந்திரா படத்தில் கிராமத்தை விட்டு வெளியூருக்கு சென்று படித்துவிட்டு மீண்டும் கிராமத்திற்கு வருவது போலவும், சாதிக்க நினைக்கும் கதாநாயகிக்கு உறுதுணையாக இருப்பது போலவும் நடித்திருப்பார். அதில், அவர் ஹீரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘16 வயதினிலே’ படத்தை கேவலமா நினைச்சு நடிக்க மறுத்த நடிகர்கள் – அட அந்த நடிகர் கூடவா!..

google news
Continue Reading

More in Cinema History

To Top