Cinema News
விஜயின் அரசியல் எங்கு ஆரம்பிச்சது தெரியுமா? அப்பவே சிம்மாசனம் போட்டு உட்கார வச்சது இவர்தானாம்
தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு அளவே இருக்காது. ஏதோ ஒரு பண்டிகையை கொண்டாடுவதைப் போல ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக கொண்டாடி தீர்த்து விடுவார்கள். அதுவும் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகராக விஜய் திகழ்ந்து வருகிறார்.
பல விமர்சனங்கள், எதிர்மறையான கருத்துக்கள் இவை எல்லாவற்றையும் கடந்து இன்று ஒரு மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார் விஜய். எந்தப் பிரச்சனையும் ஒரு மனிதனின் பக்குவத்திற்கு வித்திடும் என்று சொல்வார்கள். அதைப்போலவே, தான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சனையில் இருந்தும் விஜய் ஒரு நல்ல பக்குவத்தை அடைந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க : நடிச்சது போதும்!.. ரிட்டயர்ட் ஆயிடு தலைவா!.. ஜெயிலரை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!..
சமீப காலமாக தன் படங்களின் மூலமாகவும் பாடல்களின் மூலமாகவும் அரசியலை வெளிப்படையாகவே கூறி வந்த விஜய் இன்று தைரியமாக அரசியலுக்குள் கால் பதித்திருக்கிறார். இதுவும் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளின் மூலமாகத்தான் நடந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தனது மக்கள் இயக்கம் சார்பாக ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் விஜய்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட தைரியமாக தேர்தலை சந்திப்பார் என்றும் பல பேர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பார்வை ஒன்றே போதுமே, சார்லி சாப்ளின், பெரியண்ணா போன்ற பல படங்களுக்கு இசையமைத்த இசை அமைப்பாளர் பரணி விஜய் பற்றி தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க : எஸ்.பி.பி பாடிய முதல் பாடலா இது? குரல் சரியில்லையென விரட்டியடித்த தயாரிப்பாளர்
அதாவது விஜயின் அரசியலைப் பற்றி இப்போது பல கருத்துக்கள் உலா வருகின்றது. ஆனால் அதை அவருடைய முதல் படத்திலேயே நான் சொல்லி இருக்கிறேன் என கூறி அவர் ஹீரோவாக நடித்த முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தில் வரும் முதல் பாடலை எழுதியவர் பரணிதானாம். அந்தப் படத்தில் வரும் மாப்பிள்ளை நான் சொல்லப் போறேன் என்ற பாடலில் இரண்டாம் சரணத்தில் அரசியல் பற்றிய கருத்துக்களை தெளிவாக உணர்த்தி இருப்பார் பரணி.
“காந்தி பிறந்ததும் அண்ணா பிறந்ததும்
பேரு புகழ் பெற்று மேலே உயர்ந்ததும்
நெஞ்சில் இருக்குது சொல்ல துடிக்குது நீ கேளு
மண்ணில் பிறந்ததும் கொள்கை இருக்கணும்
வாழ்ந்து முடிச்சதும் பேரு நெலைக்கணும்
இந்த நினைப்பது என்றும் இருக்கணும் நெஞ்சோடு
கல்வி கண்தந்த காமராசர் போல
தமிழின் நிலை காக்கும் கலைஞர் போல
வாரி கொடுத்ததில் வள்ளல் எம்ஜியார் போல
புரட்சி பல செய்யும் செல்வியப் போல
ஊரெங்கும் பேர் வாங்க அவர் போல நாமும் உழைக்கணும்”
இதை வரிகளை குறிப்பிட்டு பேசிய அவர் இந்தப் பாடலை இப்பொழுது கேட்கும் போது இதுதான் விஜயின் அரசியலுக்காக இந்த பாடல் அமைந்த மாதிரி எனக்கு தெரிகிறது என்றும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என இப்பொழுது ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள் என்றும் நான் அப்பவே எழுதி இருக்கிறேன் என்றும் கூறினார்.