Connect with us
எம்ஜிஆர்

Cinema History

எம்.ஜி.ஆரை பார்க்க விடாமல் துரத்தப்பட்ட பாக்கியராஜ்!.. தடுத்தது யார் என்று தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!..

எம்ஜிஆர் -ஐ பார்க்க வந்த பாக்யராஜை யார் துரத்தினார்கள்..??

எம்ஜிஆர் எம்ஜிஆர் அவர்கள் உடல்நிலை சரியில்லாத போது அமெரிக்காவை சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை சந்திக்க விருப்பம் கொண்ட பாக்கியராஜ் அவர்கள் அவரை சந்திப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றதாக பாக்யராஜ் அவர்கள் சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார். அங்கே நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகளை பற்றி அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

எம்ஜிஆர் அவர்கள் தமிழ்நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரமாக திகழ்ந்து பின்பு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்.இவர் முதலமைச்சர் ஆக இருந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் நடிகர் பாக்கியராஜ். பாக்கியராஜ் அவர்கள் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு போன்ற சில படங்கள் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதன் மூலம் தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக அந்த காலத்தில் பாக்கியராஜ் அவர்கள் திகழ்ந்து வந்தார்.

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

பாக்கியராஜ் அவர்கள் எம் ஜி ஆர் அவர்களின் தீவிர ரசிகர் ஆவார். மேலும் எம்ஜிஆர் அவர்களைப் போலவே திரையில் இருந்து அரசியலுக்கு போகும் ஆசை அவருக்கு இருந்தது. இதை ஒரு மேடையில் அவருக்கு சூசகமாக சொல்லிக் கொண்டிருந்தபோது எம்ஜிஆர் அவர்கள் குறிப்பிட்டு பாக்யராஜ் எனது கட்சியை சேர்ந்தவர் இல்லை என குறிப்பிட்டார்,பின்பு பாக்யராஜ் அவர்களை எம்ஜிஆர் தனியாக அழைத்து நீ கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கிறாய் என்னுடைய ரசிகன் என்பதே நிறுத்திக்கொள் கட்சி பெயரை எடுத்தால் உனது படத்தை எதிர்க்கட்சியினர் ஓட விடாமல் செய்ய பல வேலைகளை செய்ய தொடங்குவார்கள், அதன் மூலம் நீ சினிமாவில் பெற்று இருக்கும் இடத்தை இலக்க நேரிடும் எனவே மிகவும் கவனமாக இரு உனக்கான அரசியல் பிரவேச காலம் வரும்போது நீ அரசியலில் இறங்கலாம் என தெரிவித்தார் என பாக்யராஜ் அவர்கள் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க- ப்ப்பா என்னா பொண்ணுடா!.. போதும் செல்லம் ஹார்ட்டு வீக்கு!.. பிரியாவிடம் ஜொள்ளுவிடும் புள்ளிங்கோ..

Bakiya raj

Bakiya raj

எம்ஜிஆர் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் உள்ள ஒரு சிறு தீவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது பாக்யராஜ் அவர்கள் எம் ஜி ஆர் ஐ சந்திப்பதற்காக நியூயார்க் மாகாணத்திற்கு சென்று இருந்தார். அங்கிருந்து எம்ஜிஆர் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று இருந்தார். அங்கே எம்ஜிஆர் அவர்களின் மனைவி ஜானகி அவர்கள் பாக்யராஜ் அவர்களை நிறுத்தி எங்கே அமெரிக்காவை சுற்றி பார்க்க வந்திருக்கிறீர்களா என முகம் சுளிக்கும் வண்ணம் கேட்டதாக பாக்யராஜ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.மேலும் எம்ஜிஆர் அவர்களை சந்திப்பதற்காக வந்தேன் என கூறிய போது அதற்கு மருத்துவமனையில் பாஸ் எடுக்க வேண்டும் நான் அதை ஏற்பாடு செய்து விட்டு உங்களை அழைக்கிறேன் என கூறிவிட்டார்.மிகவும் மன வருத்தத்துடன் அங்கிருந்து கிளம்பியதாக அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

அதன்பின்பு எம்ஜிஆர் அவர்களின் உதவியாளர் ஒருவரை போகும் வழியில் சந்தித்ததாகவும், அவர் எம்ஜிஆர் அவர்களிடம் பாக்யராஜ் வந்ததை தெரிவித்ததன் பொருட்டு எம்ஜிஆர் அவர்கள் அனைவரையும் மிகவும் கோபமாக பேசி பாக்யராஜை உடனே வர சொல்லுங்கள் என அழைத்ததாகவும் பாக்யராஜ் அவர்கள் கூறினார். பின்பு நியூயார்க்கில் இருந்து மீண்டும் மருத்துவமனைக்கு தான் சென்றதாகவும் அங்கே எம்ஜிஆர் அவர்களின் மனைவி ஜானகி அவர்கள் எதுவுமே நடக்காதது போல வாங்கல் பாக்யராஜ் என கூறினார், எனவும் தனது பேட்டியில் கூறியிருந்தார்.பின்பு எம்ஜிஆர் அவர்கள் பாக்யராஜ் அவர்களை ஆசீர்வதித்து தனக்காக தொகுதியில் பேசும் படி கூறினார் என பாக்யராஜ் அவர்கள் தனது இன்டர்வியூவில் தெரிவித்து இருந்தார்.

இதன் மூலம் எம்ஜிஆர் அவர்களை யாரும் நெருங்கவிடாமல் அவரது மனைவி பார்த்துக் கொண்டார் என பாக்யராஜ் அவர்கள் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க-  நடிச்சது போதும்!.. ரிட்டயர்ட் ஆயிடு தலைவா!.. ஜெயிலரை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top