Connect with us
sivaji

Cinema History

பராசக்தி படத்திலிருந்து தூக்கப்பட்ட சிவாஜி!.. அதுக்காக அவர் பட்ட கஷ்டம்!..

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர். பல வேடங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சாமானிய மனிதர் வரை கடவுள் அவதாரம் வர பல கதாபாத்திரங்களிலும் நடித்து நடிப்பில் வெரைட்டி காட்டியவர்.

சிவாஜி சிறுவயது முதலே நாடகங்களில் நடித்து வருபவர். மனோகரா நாடகத்தில் அதில் இடம் பெற்ற முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்திலும் அவர் நடித்துள்ளார். நிறைய நாடகங்ளில் பெண் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். பல வருடங்கள், பல நாடகங்களில் நடித்த பின்னர்தான் அவருக்கு பராசக்தி வாய்ப்பு கிடைத்தது.

sivaji

அதுதான் அவர் நடித்த முதல் திரைப்படம். முதல் படமே ஏவிஎம். நிறுவனம். கிருஷ்ணன் – பஞ்சு இயக்கம். கலைஞர் கருணாநிதி கதை, வசனம் அவரின் துவக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால், எளிதாக அவர் அந்த படத்தில் நடித்து முடித்துவிடவில்லை. இந்த படத்தில் முதலில் அப்போது பிரபலமாக இருந்த நடிகர் கே.ஆர்.ராமசாமியை நடிக்க வைக்கலாம் என்பதுதான் மெய்யப்ப செட்டியாரின் எண்ணமாக இருந்தது. ஆனால், பி.ஏ.பெருமாள் என்பவர் சிவாஜியை ரெக்கமண்ட் செய்தார். அவரை தவிர யாருக்கும் சிவாஜியை பிடிக்கவில்லை.

இதையும் படிங்க: கமலாம்பாளுக்கு முன்னாடியே சிவாஜி என் மீது ஆசைப்பட்டார் – நடிகை பகீர் வாக்குமூலம்

sivaji

சரி சில காட்சிகள் எடுத்து பார்ப்போம்.. சரியில்லை எனில் ஹீரோவை மாற்றிவிடலாம் என கணக்குபோட்டுத்தான் இந்த படத்தையே துவங்கியுள்ளனர். எடுத்து வரை போட்டு பார்த்த போது ‘சிவாஜி நன்றாக நடிக்கிறார். ஆனால், ஒல்லியாக இருக்கிறார். கன்னமெல்லாம் ஒட்டியிருக்கிறது. மூன்று மாதங்கள் படப்பிடிப்பை நிறுத்துங்கள். அவரை நன்றாக சாப்பிடவைத்து உடம்பை ஏற்றுங்கள். அதன்பின் சில காட்சிகள் எடுத்து பார்ப்போம். சரியில்லை எனில் கே.ஆ.ராமசாமியை ஹீரோவாக போட்டு படத்தை எடுத்துவிடுவோம்’ என மெய்யப்ப செட்டியார் சொல்லிவிட்டாராம்.

sivaji

அவர் கூறியபடியே 3 மாதங்கள் கழித்து அந்த படத்தில் மீண்டும் சிவாஜி நடித்தார். இந்தமுறை திரையில் அவரை பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. அதன்பின்னரே சிவாஜி அதில் தொடர்ந்து நடித்து முடித்தார்.

இந்த தகவலை ஏவிஎம் மெய்யப்பட்ட செட்டியாரின் மகன் குமரன் ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை பார்க்க விடாமல் துரத்தப்பட்ட பாக்கியராஜ்!.. தடுத்தது யார் என்று தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!..

google news
Continue Reading

More in Cinema History

To Top