Connect with us

Cinema History

ஹீரோவுக்கு அழ வரலைனா பளார்னு அறைஞ்சுடுவார்!.. பாரதிராஜாவிற்கே புத்தி புகட்டிய இயக்குனர்!..

தமிழ் சினிமாவில் அனைத்து இயக்குனர்களாலும் இயக்குனர்களின் இமையம் என அழைக்கப்படுபவர் பாரதிராஜா. 16 வயதினிலே திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பாரதிராஜா.

Bharathiraja

Bharathiraja

முதல் படமே இவருக்கு சிறப்பான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து பல படங்களை இயக்க துவங்கினார் பாரதிராஜா. பொதுவாக பாரதிராஜா அவரது திரைப்படங்களுக்கு என தனியான ஒரு பாணியை கொண்டிருப்பார். அதிகபட்சம் கிராமப்புறங்களில் நடக்கும் கதைகளே பாரதிராஜா படத்தின் கதைகளமாக இருக்கும்.

இதையும் படிங்க: அந்த வேடத்தில் நடிக்க பயந்து காய்ச்சலில் படுத்த சிவாஜி!.. நடிகர் திலகத்துக்கே இப்படி ஒரு நிலையா?..

முதல் படத்தில் இருந்தே பாரதிராஜா கொஞ்சம் டெரரான இயக்குனராகவே இருந்து வந்தார். இது குறித்து பாக்யராஜ் கூட ஒரு பேட்டியில் பேசியிருந்தார். 16 வயதினிலே படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது ஒருமுறை படப்பிடிப்பிற்கு கமல்ஹாசன் தாமதமாக வந்ததால் கடுப்பான பாரதிராஜா, படப்பிடிப்பு தளத்தை விட்டு கிளம்பி சென்று விட்டாராம்.

மோசமாக நடந்துக்கொண்ட பாரதிராஜா:

Bharathiraja

Bharathiraja

அப்போதெல்லாம் பாரதிராஜாவுக்கு அது முதல் படம். ஆனால் கமல்ஹாசன் அப்போது சினிமாவில் பெரிய ஹீரோவாக இருந்தார். இருந்துமே அவரிடமே இப்படி விட்டுக் கொடுக்காமல் இருந்துள்ளார் பாரதிராஜா. சில படங்களில் கதாநாயகர்கள் ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் அடித்து விடுவாராம் பாரதிராஜா.

இதையும் படிங்க:பாவனாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யோகிபாபு!.. 15 வருஷத்துக்கு முன்னயே ஒரு பிளாஷ்பேக்!..

இந்த நிலையில் இயக்குனர் பி எஸ் நிவாஸ் இயக்கிய கல்லுக்குள் ஈரம் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்ற பாரதிராஜா அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு, “நடிப்பது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொண்டேன் இது தெரியாமல் பலரையும் அடித்தது குறித்து வருத்தப்பட்டேன்” என்று தனது பேட்டி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தலைக்கணம் அதிகமாயிடுச்சா?!.. கொந்தளித்த பத்திரிக்கையாளர் !.. மன்னிப்பு கேட்ட சரத்குமார்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top