Connect with us
vijay

Cinema News

அரசியல்வாதிகள் பொறுக்கிதான்! விஜய் அப்படி கிடையாது – சர்ச்சைக்குள்ளாகும் தயாரிப்பாளரின் பேச்சு

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் மாணிக்கம் நாராயணன். தமிழில் வேட்டையாடு விளையாடு , சீனு போன்ற பல படங்களை தயாரித்தவர் தான்  மாணிக்கம் நாராயணன். சமீபகாலமாக மாணிக்கம் நாராயணன் தொடர்ந்து சர்ச்சையான பேச்சுக்களை பேசி வருகிறார். குறிப்பாக அஜித், மணிரத்தினம், ரம்பா போன்றவர்களை பற்றியும் அவர்களால் தான் எப்படி ஏமாந்து போனேன் என்பதையும் குற்றச்சாட்டாக வைத்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழக அரசியலையும் ஒட்டுமொத்த அரசியல் நிலைப்பாடுகளையும் பற்றி அவரது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அதாவது அரசியல் பொதுவாக சாதி, மதம் இவைகளை வைத்து மக்களை பிரித்துப்பார்ப்பதாக கூறியிருக்கிறார். அதுவும் இப்பொழுது உள்ள அரசு மோசமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

vijay1

vijay1

இதையும் படிங்க : கஷ்டப்பட்டு நான் பாடினது அந்த நடிகருக்கா?!.. கடுப்பான டி.எம்.எஸ்.. அட அந்த சூப்பர்ஹிட் பாட்டா!..

இதை வைத்து ஓட்டு வாங்கும் அரசியல்வாதிகள் பொறுக்கி என்றும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். எல்லா அரசியல்வாதிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்றும் என்ன ப்ராஜக்ட் பண்ணிக்கிட்டு இருக்கிறார்கள்? ஒழுங்கா ரோடு கூட போட முடியவில்லை, இதையெல்லாம் மக்கள் தட்டிக் கேட்டால் அவர்களையே ப்ளேம் பண்ணி குற்றம் சாட்டுகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் அரசியல்வாதிகளுக்கு  பெரும்பாலும் 60 வயசு இருக்கும் என்றும் வயசான காலத்துல திருந்தி மக்களுக்காக யோசித்து நல்லது செய்யலாமே என்றும் கூறியிருக்கிறார். இப்ப இருக்கிற உதய நிதி ஏதோ அவர் தொகுதியில் நல்லது செஞ்சதா கேள்விப்பட்டேன், அது சூப்பர் என்றும் கூறினார்.

இதையும் படிங்க : எம்.ஜி.ஆருக்கு லைட்டிங் செய்த லைட் பாய்!.. பின்னாளில் இந்தியாவிலேயே சிறந்த இயக்குனர்…

அதுமட்டுமில்லாமல் அரசியல்வாதிகளை லஞ்சம் வாங்குங்க என்றும் வெளிப்படையாகவே மாணிக்கம் நாராயணன் தெரிவித்திருக்கிறார். ஏனெனில் அந்த லஞ்சத்தை வாங்கிக் கொண்டாவது மக்களுக்கு நல்லத செய்யுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

vijay2

vijay2

மேலும் விஜயின் அரசியல் வருகை பற்றியும் கூறிய மாணிக்கம் நாராயணன் ‘அந்த பையன் நல்ல பையன், அவர் அம்மா விஜயை நல்லா வளர்த்திருக்காங்க, அவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக இதெல்லாம் மாற்றுவார், சாதி, மதம் பார்க்க மாட்டார், பணத்துக்காக விஜய் மாறமாட்டார் என்று தோன்றுகிறது, அதனால் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும்’ என மாணிக்கம் நாராயணன் கூறினார்.

Continue Reading

More in Cinema News

To Top