Cinema History
கண்ணாதாசனுக்கு அந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா?!.. இவ்வளவு கதை இருக்கா!..
தமிழ் சினிமாவில் சோகம், காதல், தத்துவம் என பல சூழ்நிலைகளிலும் அசத்தலான பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். தனது பாடல்வரிகளால் காலம் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் கவிஞர் அவர். 1950 மற்றும் 60களில் திரையுலகில் முக்கிய பாடலாசிரியராக இருந்தார்.
குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு பல பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார். அப்போதெல்லாம் சினிமாவில் சோக பாடல்களும், தத்துவ பாடல்களும் நிறைய இருக்கும். சம்பந்தமே இல்லாமல் ஹீரோ ஒரு தத்துவ பாடலை பாடுவார். அப்படி பல தத்துவ மற்றும் சோக பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார்.
சினிமாவில் பாட்டெழுதுவது மட்டுமில்லாமல் நூல்கள் எழுவது, கவிதை புத்தகம் வெளியிடுவது, படங்களில் நடிப்பது, தயாரிப்பது என பல வேலைகளை கண்ணதாசன் செய்துள்ளார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை கண்டபடி திட்டிய கண்ணதாசன்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?…
கண்ணதாசனின் உண்மையான பெயர் முத்தையா. ஆனால், காரமுத்து புலவர், வணங்காமுடி, கனகபிரியன், பரவத்திநாதன், ஆரோக்கியசாமி என்கிற பெயர்களில் இவர் கதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். 16 வயதில் வீட்டிலிருந்து வெளியேறி சென்னை சென்று சந்திரசேகரன் என்கிற பெயரில் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடினார்.
திருவெற்றியூரில் இருந்த ஏஜாக்ஸ் என்கிற ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை செய்து கொண்டே கதைகள் எழுத துவங்கினார். கிரஹலட்சுமி என்கிற பத்திரிக்கையில்தான் இவரின் முதல் கதை வெளிவந்தது. 1944ம் வருடம் காரைக்குடி திரும்பிய அவர் திருமகள் என்னும் இதழில் பிழை திருத்தும் வேலையை செய்தார். அப்போதுதான் தனக்கு கண்ணதாசன் என அவரே பெயர் வைத்துக்கொண்டார். அந்த பெயரே அவருக்கு நிலைத்துப்போனது.
இதையும் படிங்க: கண்ணதாசனின் கடினமான வரிகளுக்கு ட்யூன் போட்ட எம்.எஸ்.வி!.. எம்.ஜி.ஆர் அடித்த செம கமெண்ட்!..