எனக்கு பிடிக்கல! தொடர்ந்து ரஜினியின் 4 படங்களில் நடிக்க மறுத்த நளினி – ஏம்மா அப்படி என்னதான் பிரச்சினை?

Published on: July 10, 2023
nalini
---Advertisement---

தென்னிந்திய சினிமாவில் 1980 களில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நளினி. தமிழ், மலையாளம் போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர். மோகன்லால், மம்முட்டி, விஜயகாந்த், சத்யராஜ், மோகன் போன்ற பல பேருடன் ஜோடியாக நடித்திருக்கிறார் நளினி.

ஓடிக் கொண்டிருக்கும் நளினி

நடிகை ராமராஜனுடன் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அருணா என்ற மகளும் அருண் என்ற மகனும் இருக்கின்றனர். இருவருமே திருமணம் செய்து கொண்டு வெளிநாடுகளில் வசித்து வருகின்றார்களாம். ஆரம்பத்தில் நளினி குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு தன் குழந்தைகளுக்காக உழைத்துக் கொண்டிருந்தார். இப்பொழுது தனக்காக ஓடிக் கொண்டிருக்கிறேன் என ஒரு பேட்டியில் கூறினார்.

nalini1
nalini1

இவரை தமிழ் சினிமாவில் அங்கீகாரப்படுத்தியது இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்திரன். தன்னுடைய உயிருள்ளவரை உஷா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்திய பெருமை டி ராஜேந்திரனுக்கு தான் சேரும். அதன் பிறகு ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து நளினி ஒரு மிகப்பெரிய நடிகையாக மாறினார்.

இதையும் படிங்க : நாலு பேருக்கு வைக்கப்பட்ட டெஸ்ட்!.. அசால்ட் பண்ணி வாய்ப்பு வாங்கிய எம்.ஜி.ஆர்..

ரஜினியுடன் என்னதான் பிரச்சினை?

திருமணம் அதன் பிறகு விவாகரத்து என தன்னுடைய சோகமான சம்பவங்களால் சினிமாவை விட்டு கிட்டத்தட்ட பல வருடங்கள் ஒதுங்கி இருந்த நளினி இப்பொழுது மீண்டும் சின்னத்திரையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நளினி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பற்றி கூறியிருக்கிறார்.

nalini2
nalini2

பல நடிகர்களுடன் நடித்து வந்த நளினி ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்தில் கூட இதுவரை நடித்ததில்லை. ஆனால் அவரை தேடி மாவீரன், தங்க மகன், கை கொடுக்கும் கை, தம்பிக்கு எந்த ஊரு போன்ற ரஜினியின் படங்கள் வாய்ப்புகளை கொடுத்திருக்கிறது. இந்த எல்லா படங்களிலும் நடித்திருக்கிறாராம் நளினி.

இதையும் படிங்க : பார்ட் ஒன் சூப்பர் ஹிட்!. ஆனா பார்ட் 2 ஃப்ளாப் ஆன ஐந்து திரைப்படங்கள்!..

ஆனால் பாதி நாட்கள் நடிப்பாராம். பாதி நாட்கள் எனக்கு பிடிக்கவில்லை என்று வந்து விடுவாராம். மேலே குறிப்பிட்ட இந்த நான்கு படங்களிலும் இதே போன்ற செயல்களில் தான் நளினி ஈடுபட்டிருக்கிறார். எல்லா படங்களிலும் நடித்து பிடிக்கவில்லை என்று பாதியிலே வந்துவிட்டாராம். இதைப் பற்றி பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கேட்டபோது “அது என்னமோ தெரியல. எனக்கு பைத்தியம்” என்று ஏடாகூடாமான பதிலை சொல்லி நழுவி விட்டார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.