இந்த வயசுலயும் இதெல்லாம் பண்றாரே… லால் சலாம் படப்பிடிப்பில் மாஸ் காட்டிய தலைவர்!..

Published on: July 10, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை பெற்றிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தனது தனிப்பட்ட நடிப்பு மற்றும் ஸ்டைல் காரணமாக ரஜினிகாந்திற்கு மட்டுமே பொருத்தமான ஒரு பட்டமாக இந்த சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் மாறி விட்டது.

அதே போல ரஜினிகாந்த் இப்போதும் கூட இளம் தலைமுறை நடிகர்களுக்கு போட்டி நடிகராக இருக்கிறார். இப்போது உள்ள பெரும் நடிகர்கள் கூட ரஜினி படம் வெளியாகும்போது தங்களது படத்தை வெளியிட தயங்குவதுண்டு. அந்த அளவிற்கு ரஜினிகாந்த் ஒரு வரவேற்பு பெற்ற நடிகராக இருக்கிறார்.

Rajinikanth
Rajinikanth

இதையும் படிங்க: வண்டிக்கு பின்னாடி போய் ட்ரெஸ் மாத்துனாலும் எட்டிக்கிட்டு பார்ப்பாங்க!. நடிகைக்கு நடந்த சோகம்..

தற்சமயம் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மாஸ் காட்டிய தலைவர்:

இதற்கிடையே லால் சலாம் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தப்போது படப்பிடிப்பு தளத்திற்கே ஷாக் கொடுக்கும் சம்பவம் ஒன்றை ரஜினி செய்துள்ளார். காலை 7 மணிக்கே படப்பிடிப்பிற்கு வந்துவிட்டார் ரஜினி. ஆனால் அன்று படப்பிடிப்பு அதிக நேரம் நடந்தது.

இதையும் படிங்க: ‘மாவீரன்’ படத்தில் சர்ப்ரைஸ் கதாபாத்திரம்! இந்த நடிகரா? ஒழிச்சு வச்சு வேடிக்கை பார்த்த படக்குழு

கிட்டத்தட்ட இரவு 3 மணிக்குதான் படப்பிடிப்பு முடிந்ததாம். தனது மகள் இயக்கி வருவதால் ரஜினிகாந்தும் வீட்டிற்கே செல்லாமல் படப்பிடிப்பு தளத்திலேயே இருந்துள்ளார். இந்த வயதிலும் இவர் இவ்வளவு நேரம் படப்பிடிப்பில் இருக்கிறாரே என படப்பிடிப்பு தளமே ஆச்சரியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகனின் தயவால்தான் வண்டியே ஓடுதா? பின்னாடி இருந்து ஆட்டுவிக்கும் மணிரத்தினத்தின் வாரிசு

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.