Cinema News
செல்லாக்காசுதான்! வீட்டுக்குள்ள பிரச்சினையை முதல்ல முடி.. அப்புறம் வா – விஜயை நார் நாராக கிழிக்கும் பத்திரிக்கையாளர்
நேற்றிலிருந்து அரசியல் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய விஷயம் என்றால் நடிகர் விஜய் தொகுதி வாரியாக இருக்கும் தனது மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து அரசியல் குறித்து பேசியதுதான். தனது மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்த விஜய் அரசியல் வருகை குறித்து சில முக்கிய ஆலோசனைகளை நடத்தியிருக்கிறாராம்.
லியோ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் திடீரென இந்த சந்திப்பு கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எப்பவும் போல விஜய்யை பார்க்க அவருடைய ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து நின்றதாலும் புகைப்படங்கள் எடுக்க ஓடி வந்ததாலும் சலசலப்புகள் அதிகரித்துக் கொண்டே இருந்தன.
இதையும் படிங்க : பெர்ஃபார்மன்ஸுக்குனு அப்படி பண்ணேன்! அத நக்கி சாப்பிடுனு சொல்லிட்டாரு – கொடுமையை அனுபவித்த நடிகை
அதில் கலந்து கொண்ட சில நிர்வாகிகள் விஜய் இதைத்தான் பேசினார் என சில விஷயங்களை கூறினார்கள். அதாவது “அரசியலில் இறங்குவது என்றால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன் என்றும்” விஜய் தெரிவித்துள்ளதாக கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான கோடாங்கி இந்த சம்பவத்தை பற்றி அவருடைய கருத்துக்களை ஒரு பேட்டியின் மூலம் தெரிவித்து இருக்கிறார்.
அதாவது விஜய் அரசியலுக்கு வருவார் வர மாட்டார் என ஒரு பக்கம் இருந்தாலும் கூட்டணி இல்லாமல் அவர் இறங்கினால் கண்டிப்பாக செல்லாக்காசு போல தான் ஆகிவிடுவார் விஜய் என கூறியிருக்கிறார். ஒன்று திராவிட கட்சியாகட்டும் இல்லை தேசிய கட்சியாகட்டும் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்தால் ஒழிய அவரால் நீடிக்க முடியும் .
இதையும் படிங்க : பார்த்திபனால் நின்று போன ரஜினி படம்!.. யார் சொல்லியும் கேட்காத நக்கல் நாயகன்….
அதைத் தவிர தனியாக நிற்கிறேன் என நின்றால் ஓட்டை மட்டும்தான் அவரால் பிரிக்க முடியுமே தவிர பிரதம மந்திரியாகவோ எம்பி ஆகவோ மாறி விடுவாரா எனவும் கேள்வி கேட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவரைப் பற்றிய ஏராளமான கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்பா மகனுக்கும் உள்ள பிரச்சனை. அதைத் தவிர பொது வெளியில் அவரைப் பற்றி ஏராளமான விஷயங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதை ஒரு தடவையாவது விஜய் இல்லை இது பொய் எனக் கூறியிருக்கிறாரா.
எத்தனை வாய்ப்புகள் கிடைத்தது . அதையெல்லாம் அவர் பயன்படுத்தவில்லை. இப்படி இருக்கும் போது சொந்த வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு பொது வாழ்க்கைக்கு எப்படி அவரால் வந்து பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். புஷி ஆனந்த் இவர் ஒருவரை மட்டுமே விஜய் மூடத்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரை ஆரம்பத்தில் செதுக்கியது யார் ?அவருடைய அப்பா அல்லவா? இதையெல்லாம் எப்படி மறந்து போனார் விஜய்? என்ன தான் பிரச்சனையாகட்டும் அதை இப்படியா பப்ளிசிட்டி பண்ணுவது என்றும் கூறியிருக்கிறார்.