Connect with us
kannadasan

Cinema History

மகள் திருமணத்தை நடத்த முடியாமல் தவித்த கண்ணதாசன்!.. கடவுள் மாதிரி வந்த பாட்டு!..

1950.60 களில் தமிழ் சினிமாவில் முக்கிய பாடலாசிரியராக இருந்தவர் கண்ணதாசன். காதல், சோகம், கண்ணீர், தத்துவம், மரணம் என எல்லாவற்றையும் பாடியவர். இவர் எழுதினால் அந்த மரணத்திற்கே பெருமை என்பது போல இவரின் பாடல்கள் இருக்கும். சோகம், கண்ணீர் என்றால் இயக்குனர்கள் முதலில் அழைப்பது இவரைத்தான். எளிமையான வார்த்தைகளை கொண்டு பாடல்களை எழுதியதால் இவரின் பாடல்கள் பாமரர்களிடத்திலும் பிரபலமானது.

எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் கண்ணதாசன் பல பாடல்களை எழுதியிருக்கிறார். வாழ்க்கையில் தான் சந்தித்த அனுபவங்களிலும் கண்ணதாசன் பாடல்களை எழுதியதால் அவரின் வரிகள் சாமானியர்களுக்கும் நெருக்கமாக இருந்தது. அதனால்தான், நடிகர், இசையமைப்பாளரை மறந்து கண்ணதாசன் பாடல் என ரசிகர்கள் அவரின் பாடலை ரசித்தார்கள்.

சினிமாவில் படங்களை தயாரிக்க ஆசைப்பட்டு நிறைய பணங்களை கண்ணதாசன் இழந்தார். கடனாளியாகவும் மாறினார். இதனால் மன உளைச்சலுக்கும் உள்ளானார். கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்க வசித்து வந்த வீட்டை விற்கும் நிலைக்கும் சென்றார். ஆனால், அவருக்கு அப்போது எம்.ஜி.ஆர் உதவி செய்ததாகவும் செய்திகள் உண்டு.

ஒருமுறை அவரின் மகளின் திருமண செலவுக்கு பணமில்லாமல் தவிந்து வந்தார். அப்போது தெய்வம் என்கிற படத்தில் பாடல் எழுத அவருக்கு அழைப்பு வருகிறது. அந்த படத்திற்கு இசையமைத்தவர் வயலில் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன். அப்போது கண்ணதாசனை சோதிப்பதற்காக அவர் பல கடினமான மெட்டுக்களை வாசித்து காட்ட கண்ணதாசனோ சளிக்காமால் பாடலை சொல்லிக்கொண்டே இருந்தார்.

kannadasan

அப்போது ஒரு மெட்டுக்கு ‘மருதமலை மாமனியே முருகைய்யா.. தேவரின் குலம் காக்கும் வேலையா’ என கண்ணதாசன் சொல்ல பக்கத்து அறையிலிருந்து ஓடிவந்த தேவர் கண்ணதாசனின் கைகளை பற்றிக்கொண்டு அப்போதே ஒரு லட்சத்தை அவரின் கையில் வைத்தாராம். மெய்மறந்துபோன கண்ணதாசன் ‘அந்த முருகனுக்கும்,. இந்த முத்துக்குமரனுக்கும் நன்றி’ என சொன்னாராம். அந்த பணம் அவரின் மகள் திருமணத்தை நடத்த உதவியாக இருந்ததாம்.

தயாரிப்பாளர் சின்னப்ப தேவர் எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களை தயாரித்தவர். முருக கடவுள் தொடரபான பல பக்தி படங்களையும் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இரண்டாவது திருணம் செய்ய தயாராகும் உச்ச நட்சத்திரத்தின் மகள்? – மாப்பிள்ளை யார் தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top