Cinema News
என்னது ‘மாவீரன்’ திருட்டு கதையா? திருட்டுக்கு உடந்தையாக இருந்த யோகிபாபு – என்ன மக்கா இப்படி மாட்டிக்கிட்டீயே
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக இந்த திருட்டுக் கதை விவகாரம் தலை தூக்கி ஆடிக் கொண்டிருக்கின்றது. வருடம் முழுவதும் உட்கார்ந்து தன்னுடைய சொந்த யோசனையாலும் திறமையாலும் ஒருவர் கதை எழுதினால் அதை யாரோ ஒருவர் தெரிந்து கொண்டு படமாக்கி விடுகின்றனர். அதன் பிறகு அந்தக் கதையை திரையில் பார்க்கும் பொழுது அதை எழுதியவருக்கு பெரும் அதிர்ச்சியாகிவிடும்.இப்படி காலங்காலமாக நடந்து கொண்டே தான் வருகின்றது.
இந்த மாதிரி ஒரு சம்பவம் தான் சமீபத்தில் ரிலீஸான மாவீரன் படத்திற்கும் வந்திருக்கின்றது. மண்டேலா பட இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதீதி நடிப்பில் வெளிவந்த படம்தான் மாவீரன். இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஒரு நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அசரிரீ மூலமாக சொல்வதை கேட்டு நடக்கக் கூடிய ஒரு கோழையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இதையும் படிங்க : கல்யாணமே பண்ணிக்காம வாழ்க்கையை தொலைத்த ஐந்து நடிகைகள்!!.. இப்படி நடிச்சா எப்படி கல்யாணம் ஆகும்!!..
இந்த நிலையில் இந்தப் படத்தின் கதை திருடப்பட்டிருக்கிறது என நீதிமன்றம் வரை இந்த வழக்கு சென்றிருக்கின்றதாம். அதாவது பினு சுப்பிரமணியம் என்பவர் விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் பிரியதர்ஷனுடன் இணைந்தும் ஹிந்தி படத்திலும் பணியாற்றியிருக்கிறாராம். இவர் ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த கதையை எழுதியிருந்தாராம்.
பினு சுப்பிரமணியம் கதைப்படி இந்தக் கதைக்கு ஹீரோவாக முதலில் யோகிபாபுவை தான் நினைத்திருந்தாராம். மண்டேலா படத்தில் பணியாற்றிய ஒரு கேமரா மேனின் உதவியோடு யோகிபாபுவுக்கு இந்தக் கதையை சொல்லியிருக்கிறார் பினு சுப்பிரமணியம். இதற்கிடையில் பினு சுப்பிரமணியத்திடம் ஒரு நல்ல கதை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு வட இந்திய நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸிடம் பினு சுப்பிரமணியனை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறது. இவர் கதையை உங்களோடு சேர்ந்து பணியாற்ற விரும்புகிறோம் என அந்த நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் சொல்ல அவர்கள் சூரி அல்லது ஆர்.ஜே.பாலாஜியை ஹீரோவாக போட திட்டமிட்டிருந்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க : சீக்கிரமே கல்யாணம்.. சீக்கிரமே விவகாரத்து!.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த திரை பிரபலங்கள்..
இதனிடையில் யோகிபாபு பினு சுப்பிரமணியத்திடம் எப்பொழுது படம் ஆரம்பிக்கப் போகிறீர்கள் என்று அடிக்கடி போன் செய்து கேட்டுக் கொண்டிருந்தாராம். ஆனால் உண்மையில் யோகிபாபுவால் தான் இந்தக் கதை இப்ப் உள்ளா படக்குழுவுக்கு சொல்லப்பட்டிருக்கிறதாம். நம் மீது தவறு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அந்த இயக்குனருக்கு அடிக்கடி போன் செய்து எப்பொழுது படப்பிடிப்பு வைத்துக் கொள்ளலாம் என ஒரு பேச்சுக்கு கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடும் மனவிரக்தியில் இருக்கும் பினு சுப்பிரமணியம் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையில் கிடைக்கும் தொகையில் தனக்கும் பங்கு வேண்டும் என நீதிமன்றத்தை நாடுவதாக சொல்கிறார்கள்.