
Cinema News
விஜயகாந்துக்காக அந்த படத்தில நடிச்சேன்… பல வருட சீக்ரெட்டை சொன்ன மாவீரன் சரிதா!..
Published on
By
80களில் பல திரைப்படங்களில் நடித்தவர் சரிதா. ரஜினி, சிவக்குமார், பாக்கியராஜ், ராஜேஷ் உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்தவர். மிகவும் திறமையான நடிகையாக கருதப்பட்டவர். பல திரைப்படங்களில் இவரை சுற்றியே கதை நடக்கும். பாலச்சந்தர் கூட இவரை வைத்து ‘தண்ணீர் தண்ணீர்’ என்கிற படத்தை எடுத்தார். பாலச்சந்தரின் இயக்கத்தில் சரிதா அதிக படங்களில் நடித்துள்ளார். நெற்றிக்கண், தப்புதாளங்கள் ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். சிவாஜியுடனும் இவர் நடித்துள்ளார்.
பல திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக அரசு விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். கலைமாமணி விருதும் இவருக்கு கொடுக்கப்பட்டது. நடிப்பதோடு மட்டுமில்லாமல் பல நடிகைளுக்கு இவர் குரலும் கொடுத்துள்ளார். தெலுங்கில் விஜயசாந்தி நடித்து தமிழில் வெளியான அத்தனை படங்களுக்கும் டப்பிங் பேசியவர் சரிதாதான்.
இதையும் படிங்க: பாரதிராஜா பண்ண காரியத்துக்கு தக்க பதிலடி கொடுத்த சரிதா! இப்படியெல்லாம் நடந்துச்சா?
இவர் நடிப்பில் வெளிவந்த தப்பு தாளங்கள், தண்ணீர் தண்ணீர், மௌன கீதங்கள், அக்னி சாட்சி, கல்யாண அகதிகள் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்களாகும். விஜயுடன் பிரண்ட்ஸ் படத்திலும் சரிதா நடித்திருந்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்திலும் அவரின் அம்மாவாக நடித்திருந்தார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சரிதா விஜயகாந்துடன் ஊமை விழிகள் படத்தில் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார். அந்த படத்தில் விஜயகாந்துக்காக மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏனெனில், அதற்கு முன் சில படங்களில் அவருடன் நடிக்க முடியாமல் போய்விட்டது. 5 நாள் மட்டுமே கால்ஷீட் கொடுத்தேன். சரியாக திட்டமிட்டு அப்படத்தை எடுத்தனர். எந்த குழப்பமும் இல்லாமல் வேலை செய்தார்கள். அப்படத்தில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது’ என சரிதா பேசியிருந்தார்.
இதையும் படிங்க: அடுத்த ரைசா வில்சனா மாறிய பிக் பாஸ் பிரபலம்.. உதடு பெரிதாக்க போயி இப்போ எப்படி வீங்கிடுச்சு பாருங்க மக்களே!
Pradeep: தமிழ் சினிமாவில் ஒரு சென்ஷேசன் பிரபலமாக தற்போது அறியப்படுபவர் நடிகர் பிரதீப் ரெங்கநாதன். கோமாளி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான...
சின்ன வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருவதால் சினிமாவை பற்றிய அறிவு அதிகம்...
விடுதலை 2 திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் முழுக்கதையும் ரெடி ஆகாததால் சூர்யா நடிக்க...
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....