Connect with us

Cinema History

16 வயதில் திருமணம்.. 6 மாதத்திலே விவாகரத்து.. ’மாவீரன்’ சரிதாவின் மறக்க முடியாத மர்ம பக்கங்கள்!

15 வயதில் பாலசந்தர் இயக்கத்தில் சினிமாவில் நடிக்க வந்த நடிகை சரிதாவுக்கு 16 வயதிலேயே திருமணம் நடந்து பின்னர் அதி விரைவாக விவாகரத்தும் நடந்த மர்ம கதையை பிரபல விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

1978ம் ஆண்டு சினிமாவில் கே. பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தெலுங்கில் வெளியான மரோ சரித்ரா படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. முதல் முறையாக ஹீரோயின் என்றால் சிகப்பா இருக்கணும் என்கிற ரூல்ஸை பிரேக் பண்ண சரிதா அந்த படத்தின் வெற்றி காரணமாக பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தமிழில் அதே 1978ம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தப்பு தாளங்கள் படத்திலும் சரிதா நடித்து தனது ஒட்டுமொத்த நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தினார். தொடர்ந்து பட வாய்ப்புகள் ஒரு பக்கம் நடிகை சரிதாவுக்கு குவிந்துக் கொண்டிருந்த நிலையில், அவர் வாழ்க்கையிலும் விதியும் கோரத் தாண்டவம் ஆடியது.

தெலுங்கு நடிகர் வெங்கட சுப்பையா என்பவருடன் 16 வயசிலேயே நடிகை சரிதாவுக்கு திருமணம் நடக்கிறது. திருமணம் என்றால் என்ன என்றே தெரியாத வயதில் அந்த கல்யாணம் நடைபெறும் நிலையில், திருமணத்துக்குப் பின்னர் நடிக்கக் கூடாது போன்ற பிரச்சனைகள் அப்பவே எழுகிறது.

ஆசையாக திருமணம் செய்துக் கொண்ட நடிகை சரிதாவுக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. ஏகப்பட்ட பிரச்சனைகள் வீட்டில் வெடிக்கின்றன. அதன் காரணமாக வெறும் 6 மாதத்திலேயே அந்த நடிகரை பிரிந்து வந்து விட்டார் சரிதா. மீண்டும் சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து டாப் ஹீரோயினாக மாறுகிறார்.

தண்ணீர் தண்ணீர் படத்தில் ஒரு காட்சியில் தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடம், இன்னொரு கையில் குழந்தையை வைத்துக் கொண்டு ஹீரோயின் வர வேண்டும், அந்த காட்சியை எப்படி எடுக்கப் போகிறேன் என பாலசந்தரே பயந்த நிலையில், சரிதா அசத்தலாக நடித்து செட்டில் இருந்த அத்தனை பேரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

சில முன்னணி நடிகர்கள் சரிதாவின் நடிப்புத் திறமையை பார்த்து விட்டு அவருடன் நடிக்கவே பயந்த காலம் எல்லாம் இருந்தாது. ஒரு சிலர், சரிதாவின் போர்ஷனை டம்மி பண்ணுங்க என்றே சொல்வார்களாம். பாக்கியராஜ் ஒரு சினிமா விழாவில் வெளிப்படையாக நான் பக்கம் பக்கமா வசனம் பேசி உயிரைக் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறேன், சரிதாவின் ஒரு ஒரு கண் உருட்டல் கைதட்டல்களை வாங்கி விட்டது என்றே பேசியுள்ளார்.

1988ல் மலையாள நடிகர் முகேஷை திருமணம் செய்துக் கொண்ட சரிதா மீண்டும் சினிமாவில் நடிக்க முடியாமல் பெரிய பிரேக்கே எடுத்து விட்டார். 2011ம் ஆண்டு பின்னர் நடிகர் முகேஷையும் சரிதா விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். விஜய்யின் பிரெண்ட்ஸ் உள்ளிட்ட சில படங்களில் அம்மா ரோல்களில் நடிக்க ஆரம்பித்த சரிதா, சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் அம்மா கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top