
Cinema News
உயிரே போனாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்!.. படப்பிடிப்பில் தகராறு.. ஜெ.வை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்…
Published on
By
தனது அம்மாவின் விருப்பத்தால் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான வெண்ணிற ஆடை படத்தின் மூலம் ஜெயலலிதா அறிமுகமானார். அடுத்த படமே எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்த நடிகை இவர். அதன்பின் பல திரைப்படங்கள் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளார். மேலும் சிவாஜி, ஜெய் சங்கர், முத்துராமன் ஆகியோருடனும் நடித்தார். ஒருகட்டத்தில் நடிப்பிலிருந்து விலகி அரசியலில் இறங்கினார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அதிமுகவை கைப்பற்றி தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறினார்.
ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர் என்பதை பல முறை நிரூபித்துள்ளார். முதல்வராக இருந்த போது பல துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளார். கலைஞர் கருணாநிதியை அவர் கைது செய்ய முடிவெடுத்ததெல்லாம் துணிச்சலின் உச்சம்தான். அரசியல் எதிரிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டார். அவர் முதல்வராக இருக்கும்போது அவரின் துணிச்சலை மக்கள் பார்த்துள்ளனர். ஆனால், அவர் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும்போதே அப்படித்தான்.
இதையும் படிங்க: படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி.. முதல் ஆளாக ஓடிய எம்.ஜி.ஆர்.. கண்ணீர் விட்ட முத்துராமன்…
அவர் எப்போதும் யாருக்காகவும் பயந்தது கிடையாது. ஒரு விஷயத்தை சொல்லிவிட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டர். 1972ம் வருடம் பெங்களூரில் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வர ஜெயலலிதா ஒப்புக்கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மொழி வெறியர்கள் என தெரிந்ததும் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தார். கர்நாடகாவை சேர்ந்தவராக இருந்து கொண்டு எங்களை அவமதிக்கும் ஜெயலலிதாவை விட மாட்டோம் என அவர்கள் பொங்கினார்கள்.
இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜெயலலிதா ‘நான் மைசூரில் பிறந்தவள் என்றாலும் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவள். என் தாய்மொழி தமிழ்தான். நான் ஒரு தமிழச்சி’ என பதில் கூறினார். இது கன்னட அமைப்பை சேர்ந்த சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதன்பின் கங்கா – கௌரி எனும் படத்தில் நடிப்பதற்காக மைசூருக்கு சென்றார் ஜெயலலிதா. அவர் அங்கு வந்திருப்பதை தெரிந்துகொண்ட கன்னட அமைப்பை சேர்ந்த சிலர் ஆயுதங்களுடன் அந்த ஸ்டுடியோவிற்கு வந்தனர். ‘ஜெயலலிதா தன்னை கன்னடத்து பெண் என சொல்ல வேண்டும். அதோடு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’. இல்லையேல் இங்கிருந்து வெளியேற மாட்டோம் என தகராறு செய்தனர்.
படத்தின் இயக்குனர் பந்துலுவும் ஜெயலலிதாவிடம் ‘மன்னிப்பு கேட்டு விடு’ என சொல்ல, ஜெயலலிதாவோ மறுத்துவிட்டார். அவர்கள் என்னை மிரட்டுகிறார்கள் என்பதற்காக இல்லாத ஒன்றை சொல்ல மாட்டேன்’ என உறுதியாக நின்றார் ஜெயலலிதா. அவரை சிலர் தாக்கவும் முயன்றனர். என்ன ஆனாலும் சரி மன்னிப்பு கேட்க மாட்டேன் என ஜெயலலிதா கூறிவிட்டார். ஜெயலலிதாவின் உறுதியை பார்த்து மிரண்டு போன அவர்கள் ‘சரி கன்னடத்திலாவது நான்கு வார்த்தை பேசு போய் விடுகிறோம்’ என இறங்கி வந்தனர். ஆனால், அதற்கும் ஜெயலலிதா சம்மதிக்கவில்லை. ‘எனக்கு எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும் அதை என் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன். என்னை மிரட்டி பேச வைக்க முடியாது’ என சொல்லிவிட்டார்.
jayalalitha
நிலைமை விபரீதமாவதை புரிந்துகொண்ட படக்குழு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தது. ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதன்பின் இந்த தகவல் எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்பட அவர் உடனே அவர் கர்நாடக முதலமைச்சருக்கு பேசினார். அதன்பின் போலீசார் அங்கே சென்று போராட்டகாரர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
உயிருக்கே ஆபத்தான சூழ்நிலையிலும் துணிச்சலாக நின்ற ஜெயலலிதாவின் குணம் அப்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதையும் படிங்க: தங்கவேல் தலையில் இருக்கும் தொப்பியின் ரகசியம் இதுதான்!. இவ்வளவு நடந்திருக்கா?!…
Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் இவரின்...
Rashmika Mandana: சிவகார்த்திகேயனின் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார் அல்லது அந்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என...
Ajith Vijay: கோலிவுட்டில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வளம் வருபவர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். சின்ன பட்ஜெட்டுகளில் சில படங்களை தயாரித்திருக்கிறார்....
Seeman: இயக்குனர் மணிவண்ணனிடம் சில படங்களில் வேலை செய்தவர் சீமான். மேலும் பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள், தம்பி, இனியவளே, வீரநடை ஆகிய 5...
Vijay TVK: சினிமாவில் உச்சம் தொட்டு அடுத்து அரசியலிலும் சாதிக்கவேண்டும் என்ற முனைப்போடு வந்தார் விஜய். ஆரம்பத்தில் மாணவ மாணவியர்களுக்கு தேவையான...