கமல் படத்தில் நடித்ததால் கன்னத்தில் அறை வாங்கினேன்!.. கண்ணீரை தாண்டி சாதித்த வடிவுக்கரசி..

Published on: July 27, 2023
vadivu
---Advertisement---

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன திரைப்படங்களில் நடித்து கதாநாயகியாக உயர்ந்தவர் வடிவுக்கரசி. அதன்பின் மற்ற கதாநாயகிகளுடன் இணைந்து நடித்தார். பக்கத்து வீட்டு பெண், கதாநாயகியின் அக்கா அல்லது தோழி என பல கதாபத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடித்து சூப்பர் ஹிட் அடித்த ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்திலும் அசத்தலான வேடத்தில் நடித்திருப்பார்.

vadivu

அதன்பின் ‘கன்னி பருவத்திலே’ படத்தில் ராஜேஷுக்கு ஜோடியாக நடித்து தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தார். அதன்பின் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இளமையாக இருக்கும் போதே வயதானவர் வேடத்தில் அதிகம் நடித்த நடிகை இவராகத்தான் இருப்பார். பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி நடித்து வெளியான ‘முதல் மரியாதை’ படத்தில் அவரின் மனைவியாக அசத்தலான வேடத்தில் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: கூப்பிட்டு அசிங்கப்படுத்தினாங்க!.. ரஜினி பண்ணத மறக்கவே முடியாது!. ஃபீலிங்ஸ் காட்டும் வடிவுக்கரசி…

vadivu

பெரும்பாலும் நெகட்டிவ் ரோலிதான் நடிப்பார். அதுதான் அவருக்கு பொருத்தமாகவும் இருந்தது. இப்போது பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் ‘என் அப்பா சினிமாவில் சேர ஆசைப்பட்டு அது நடக்காமல் போய்விட்டது. நிறைய பணத்தையும் இழந்துவிட்டார். எனவே, 17 வயது இருக்கும்போது தூர்ஷன், கன்னிமாரா ஹோட்டல் என பல இடங்களிலும் வேலை செய்தேன். கன்னிமாரா ஹோட்டலில் வேலை செய்தபோது தெரிந்த ஒருவரின் மூலம் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நானும் நடித்தேன்.

vadivu

ஆனால், இது என் அப்பாவுக்கு தெரியாது. சிகப்பு ரோஜா ரிலீஸ் ஆதவற்கு முன்பே என் நடிப்பு பலருக்கும் பிடித்து போக, பல படங்களிலும் வாய்ப்பு வந்தது. ஆனால், எனக்கு விருப்பமில்லைல். ஒருமுறை ஒரு புரடெக்‌ஷன் மேனேஜர் என்னை தேடி என் வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது என் அப்பாவுக்கு விஷயம் தெரிந்துவிட்டது. நான் வேலை முடிந்து வீட்டுக்கு போனபோது என் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டார்.

‘சினிமாவால்தான் நான் நாசமாய் போனேன். இனிமேல் நீ வேலைக்கு போகவேண்டாம்’ என சொல்லிவிட்டார். அதன்பின் என் அப்பாவின் நண்பர் ஒருவர் அவரை சம்மதிக்க வைத்து ஒரு படத்தில் நடிக்க வைத்தார். அப்படியே சில படங்கள் நடித்தேன். கன்னி பருவத்திலே படத்தில் நடித்தபின் என் அப்பா என்னை தடுக்கவே இல்லை. முழுநேர நடிகையாக மாறிவிட்டேன்’ என வடிவுக்கரசி கூறியிருந்தார்.

இதையும் படிங்க: எந்த தாயும் அனுபவிக்காத வேதனை! சில்க் விஷயத்தில் நடந்த மோசமான சம்பவம்