விஜயகாந்த் செய்த உதவியை மறந்தாச்சா? நன்றி கெட்டவரா விஜய்?

Published on: July 28, 2023
vijay
---Advertisement---

விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் விஜய்க்கு எச்சரிக்கை விடும் வகையில் பிரேமலதா விஜயகாந்த், சமீபத்தில் பேசியிருந்தார். விஜயகாந்த் போல வர நினைத்தால் மோசமான விளைவுகள் தான் ஏற்படும் என்று அவர் வெளிப்படையாகவே பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த், விஜய் மீது கோபத்தில் இருக்கிறார்.

vijay kanth

அதனால் தான் அப்படி பேசியுள்ளார் என்று செய்யாறு பாலு சமீபத்தி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார். விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த குடம்பம்,  வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, வெற்றி உள்ளிட்ட படத்தில் விஜயகாந்த் தான் ஹீரோ. பல ஆண்டுகள் கழித்து விஜய் ஹீரோவான பிறகு, செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் வந்து நடித்துக்கொடுத்திருப்பார்.

அதில் வரும் ஒரு காட்சியில் விஜயின் கையை தூக்கி காட்டியிருப்பார் விஜயகாந்த். அந்த சமயத்தில் உச்சத்தில் இருந்தார் விஜயகாந்த். பல படங்களில் வரிசாயக நடித்துக் கொண்டிருந்தார்.அப்படி மிகவும் பிசியாக இருந்த போதும் கூட, விஜயின் தந்தை எஸ்ஏசி கேட்டுக்கொண்டதால், நேரம் ஒதுக்கி கொடுத்து, வந்து நடித்து கொடுத்தார். அந்த படத்தில் விஜயின் அண்ணனாக நடித்திருப்பார் விஜயகாந்த்.

vijay

இதனை பார்த்து பலர் நடிகர் விஜயகாந்த்தின் உண்மையான தம்பி தான் விஜய் என்று தவறாக நினைத்துக்கொண்டார்கள். அந்த படம் ஹிட்டானதற்கே விஜயகாந்த் தான் காரணம் என்று கூட சொல்லலாம். விஜயகாந்த் நேரமே இல்லாமல் பிசியாக இருந்த போது கூட 23 நாட்கள் நேரம் ஒதுக்கி கொடுத்து விஜய்க்காக நடித்து கொடுத்தார்.

இப்போது விஜய் பெரிய ஹீரோவான பிறகு, விஜயகாந்த்திற்கு உடல்நிலை மோசமான போது, விஜய் நேரில் சென்று பார்க்க கூட இல்லை. தற்போது விஜயகாந்தின் மகன் நடிக்கும் படத்தில் விஜய் நடித்து கொடுத்து, விஜயகாந்த் செய்த உதவிக்கு கைமாறு செய்யலாம். அவர் நினைத்தால் அது முடியும். ஆனால் விஜய் அதை செய்ய முன்வரவில்லை என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.