மனுஷனுக்கு உடம்பெல்லாம் அறிவு! அவர பேட்டி எடுக்கும் போது அஜித் ஆசைப்பட்ட விஷயம் – சந்தானம் கூறிய சீக்ரெட்

Published on: July 28, 2023
santhanam
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை தன்னுடைய சொந்த உழைப்பாலும் திறமையாலும் யாரும் எட்ட முடியாத ஒரு உயரத்தை எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனியாக நின்று சாதித்து காட்டியவர்.

san1
san1

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அஜித் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற இதர செயல்களிலும் தன்னை மிகவும் ஈடுபடுத்தி வருகிறார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கு கொண்டு ஏகப்பட்ட பதக்கங்களையும் பெற்றுள்ளார் அஜித்.

சமீபத்தில் தான் அஜித் இந்தியாவின் சில முக்கியமான இடங்களுக்கு தனது பைக் சுற்று பயணத்தை முடித்தார். இந்த நிலையில் நடிகர் அஜித்தை பற்றி சந்தானம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அஜித்தின் ஏகே 61 திரைப்படத்தில் முதலில் சந்தானமும் நடிக்க இருந்தது. அதாவது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருந்த அந்த படத்தில் அஜித்துடன் சந்தானத்தை இணைக்க விக்னேஷ் முயற்சித்தார்.

san2
san2

அதைப்பற்றி அஜித்திடம் விக்னேஷ் சொல்லும் போது அதற்கு அஜித் “சந்தானம் இப்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அவர் நடிக்க சம்மதமா என முதலில் அவரை கேளுங்கள்” என சொன்னாராம். சந்தானமும் சம்மதித்த பிறகு தான் இந்தப் படத்தில் அவர் கமிட் ஆகி இருக்கிறார். ஆனால் கடைசியில் அந்த படம் அப்படியே நின்று விட்டது.

மேலும் அஜித் எந்த ஒரு பேட்டியும் கொடுக்க விரும்பாதவர். ஆனால் அவரை ஆரம்பத்தில் பேட்டி எடுத்தவரே சந்தானம் தான். அஜித்தும் சந்தானமும் சேர்ந்து நடித்த பில்லா திரைப்படத்தின் சமயத்தில் தான் அந்த பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது அஜித்தே இதை சந்தானம் எடுத்தால் நன்றாக இருக்கும் என கூறினாராம். மேலும் சந்தானத்திடமே அஜித் இந்த பேட்டியை நீ எடுத்தால் மிகவும் சுவாரசியமாக இருக்கும் எனக் கூற அதற்கு சந்தானம் என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும் என கேட்டாராம்.

san3
san3

அதற்கு அஜித் அப்படி ஒன்றும் இல்லை. நீ என்ன கேட்க விரும்புகிறாயோ அந்த கேள்விகளை எல்லாம் கேட்கலாம் என கூறினாராம். கடைசியில் அஜித் கொடுத்த ஒரு சில பேட்டிகளில் சந்தானம் அஜித்தின் அந்த பேட்டி தான் பெஸ்ட் ஆக அமைந்தது. இதை சந்தானம் அண்மையில் அளித்த ஒரு பத்திரிக்கையாளர் பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க : நடிகர் சுப்பு பஞ்சு இந்த வேலையெல்லாம் செய்திருக்கிறாரா?!.. யாருக்கும் தெரியாத ரகசியம் இதுதான்!..

மேலும் அஜித்தை பற்றிக் கூறும் போது ‘அஜித் மிகவும் அறிவாளி என்றும் எதையும் சீக்கிரம் தெரிந்துகொள்ள விரும்புவார் என்றும் எல்லா விஷயமும் தெரிந்தவர் என்றும் ’ கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.