ஒருபடம் ஹிட்டானதும் சம்பளத்தை ஏத்திய நடிகர்கள்!.. தோனி தலையிலயே மொளகா அரைச்ச நடிகர்….

Published on: July 29, 2023
manikandan
---Advertisement---

எந்த துறையிலும் இல்லாத அளவுக்கு சினிமாவில் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். ஹீரோ எனில் சொல்லவே தேவையில்லை. மார்க்கெட் நிலவரத்துக்கு ஏத்தபடி கோடிகளில் சம்பளம் கிடைக்கும். விஜய் சம்பளம் ரூ.200 கோடியை நெருங்கிவிட்டதாகவும், அஜித் சம்பளமும், ரஜினி சம்பளமும் கிட்டத்தட்ட ரூ.100 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் ரூ.30 கோடி வரையும், விஜய் சேதுபதி ரூ.15 கோடி வரை சம்பளம் பெறுகிறார்கள்.

dada
dada

ஒருபக்கம் சின்ன நடிகர்கள் கூட சில கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. சில லட்சங்களை சம்பளமாக பெற்றுவந்த நடிகர்கள் கூட ஒருபடம் ஹிட் கொடுத்துவிட்டால் கோடிகளில் சம்பளத்தை உயர்த்தி விடுகிறார்கள். விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்தவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் பிரபலாமானார். நட்புன்னா என்னன்னு தெரியுமா, லிஃப்ட்,டாடா என சில படங்களில் நடித்தார். இதில் டாடா திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. இதையடுத்து தனது சம்பளத்தை ரூ.2.5 கோடியாக சம்பளத்தை ஏற்றிவிட்டார்.

இதையும் படிங்க: பாதியிலேயே விட்டுப் போன அஜித்! அதுல நான் நடிப்பதா? உதறித்தள்ளிய பிரபுதேவா – படமோ சூப்பர் ஹிட்

good night

அதேபோல, சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் அதிகம் பார்க்கப்படும் வீடியோ நடிகர் மணிகண்டனுடையது. சிறந்த மிமிக்ரி கலைஞரான இவர் ரஞ்சித் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் இருளராக வந்த மணிகண்டனின் நடிப்பு பலரையும் அதிரவைத்தது. அதேபோல், அவரின் மிமிக்ரி வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அவரின் நடிப்பில் வெளியான குட்நைட் என்கிற திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டன் தனது சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்திவிட்டார்.

lgm

அதேபோல், பியார் பிரேமா காதல், தாராள பிரபு ஆகிய படங்களில் நடித்த ஹரிஸ் கல்யாண் தனது சம்பளத்தை ரூ.1.5 கோடியாக உயர்த்திவிட்டாராம். கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த எல்.ஜி.எம் படத்திலும் இவர் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு அவர் ரூ.1.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

இவர்களை போலவே திரையுலகில் வளர்ந்து வரும் பல நடிகர்களும் ஒரு படம் கொஞ்சம் ஓடிவிட்டால் கோடிகளில் சம்பளம் கேட்பது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சூர்யா பணம் பல கோடி காலி!. சொந்த பணத்தை கணக்கு பார்த்து கச்சிதமா முடித்த பாலா!.. வணங்கான் அப்டேட்!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.