ரஜினி என்னதான் ‘காக்கா’ன்னு சொல்றார்!.. கேப்பில் கெடாவெட்டி குட்டய குழப்பும் புளூசட்ட மாறன்..

Published on: July 29, 2023
blue satta
---Advertisement---

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய ரஜினி ’‘காகம் ஒரு இடத்தில் இருக்காது. அங்கும் இங்கும் பறந்து கொண்டிருக்கும். ஆனால், பருந்து அமைதியானது. காகம் உயர பறந்து சென்று பருந்தை கொத்தினாலும் பருந்து காகத்தை ஒன்றும் செய்யாது. காகம் பருந்து உயரத்திற்கு பறக்க ஆசைப்படும். ஆனால் முடியாது. கீழே விழுந்துவிடும்’ என ரஜினி பேசியிருந்தார்.

rajini jailer

சமீபகாலமாக விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என திரையுலகினர் பலரும் பேச துவங்கிவிட்டனர். அதற்கு காரணம் ரஜினியின் நடிப்பில் வெளியான கடந்த கால படங்கள் ரசிகர்களை கவரவில்லை. சந்திரமுகிக்கு பின் ரஜினி அது போல ஹிட் படத்தை இதுவரை கொடுக்கவில்லை. பாபா, லிங்கா, குசேலன், தர்பார், அண்ணாத்த என அவர் நடிப்பில் வெளியான படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கவில்லை. அதோடு, விஜயின் திரைப்படங்கள் ரஜினி படத்தை அதிக வசூல் செய்து வருகிறது. மேலும், ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறிவிட்டார்.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் பட்டத்த வச்சிக்கிட்டு நான் படுற கஷ்டம் இருக்கே!.. மேடையில் புலம்பிய ரஜினி…

vijay rajini

ஏற்கனவே ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் ‘இவன் பேர தூக்க நாலு பேரு பட்டத்தை பறிக்க நூறு பேரு’ என்கிற பாடல் வரிகள் மூலம் ரஜினி பதில் சொன்னார். இந்நிலையில்தான், இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காக்கா – பருந்து கதையை சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ரஜினி, விஜய் உள்ளிட்ட நடிகர்களை கடுமையாக விமர்சித்து வரும் பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்டமாறன் ரஜினி என்னைத்தான் மறைமுமாக சொல்லியிருக்கிறார் என டிவிட்டரில் பதிவிட்டு ‘பருந்து மக்களிடம் ஒன்றி வாழாது. உயரத்தில் தனியே திரியும். காகம் மனிதர்களுடன் வாழும். உயரே பறப்பது மட்டுமே உயர்குணம் ஆகாது. கருமை நிறத்தில் இருப்பதால் பருந்தை விட காகம் தாழ்ந்தும் போகாது. நீயும் கருப்புதான் என்பதை நினைவில் கொள்.. காமடி பருந்தே!..

blue

இதை சொன்னாலும் பருந்தின் மண்டையில் ஏறாது. ஏறினாலும் ஏறாதது போல் நடிக்கும். யாரை காகமென்று கூறினார் என்று சமூக வலைத்தளம் எழுதுமாம். ப்ளூ சட்டை என தைரியமாக மேடையில் கூற பருந்திற்கு திராணி இல்லை. ஆகவே அல்லக்கைகளை உசுப்பி விடுகிறது. இதற்கெல்லாம் காகம் அசரவே அசராது. பருந்தின் வண்டவாளங்கள் தொடர்ந்து தண்டவாளத்தில் ஏற்றப்படும்’ என கவிதையெல்லாம் எழுதியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள் ‘ரஜினி ஒரு சூப்பர்ஸ்டார். அவர் உன்னைத்தான் சொல்கிறார் என சொல்லி பப்ளிசிட்டி தேடாதே.. நீயெல்லாம் ஒரு ஆளே இல்ல அவர் முன்னாடி சம்மந்தம் இல்லாம நீயே சொல்லிக்குற’ என கண்டபடி அவரை திட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: குடிமகன்களுக்கு ரஜினி சொன்ன சூப்பர் டிப்ஸ்! ஐய்யோ தலைவா பொசுக்குனு இப்படி சொல்லிட்டீங்க

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.