சச்சின் கங்குலி சிறந்த பவுலர்களை எதிர்கொண்டனர்… ஆனால் கோலி ? – இயன் சேப்பல் கருத்து !

Published On: December 23, 2019
---Advertisement---

94ca9e04aed13c2319705b6153138655

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களாக சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் தங்கள் கிரிக்கெட் வாழ்வில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டனர் என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தற்போதைய தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக விராட் கோலியும் , ரோஹித் ஷர்மாவும் விளங்கி வருகின்றனர். இந்நிலையில் அவர்களை சச்சின் மற்றும் கங்குலியோடு சிலர் ஒப்பிட்டு வருகின்றனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான இயான் சேப்பல் இணையதளம் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் இதுபற்றி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில் ‘ சச்சினும், கங்குலியும் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த போது மிகச்சிறந்த பவுலர்களை எதிர்கொண்டனர். அதுபோல தரமான பவுலர்களை ரோஹித்தும், கோலியும் சந்தித்து இருப்பார்களா?. ஒருவரின் எதிராளியை வைத்தே அவரை மதிப்பிடலாம் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்  இம்ரான் கான் கூறுவார். அதை வைத்து மதிப்பிடும் போது சச்சின் கங்குலி இருவரும் யார் யாரை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதே அவர்கள் யார் என்பதற்கு சான்று. புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் கோலி சிறந்த பேட்ஸ்மேன் தான் ‘ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment