Home News Reviews Throwback Television Gallery Gossips

தொகுப்பாளினியை அடைய நினைத்த அரசியல்வாதி.. டாட்டா சுமோவிலே முடிக்க திட்டம்.. கதறிய விஜே!

Published on: July 30, 2023
---Advertisement---

சினிமா நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகைகளுக்கு மட்டுமின்றி சில அழகான தொகுப்பாளினிகளுக்கும் பாலியல் தொல்லை விஷயங்கள் அவர்கள் பணிபுரியும் இடங்களை தாண்டியும் சில வக்கிரம் பிடித்த அரசியல்வாதிகளால் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் உட்கார்ந்து கொண்டே அரசியல்வாதிகள் சிலர் ஆபாச படங்கள் பார்ப்பதும், கட்சியில் உள்ள பெண்களிடமே அத்துமீறி நடப்பதும், பூஜை அறையில் உட்கார்ந்து கொண்டு சில்மிஷங்கள் செய்வதுமே சிக்கி வருகின்றன.

தொகுப்பாளினிக்கு தொல்லை கொடுத்த அரசியல்வாதி:

இந்நிலையில், அரசியல் கூட்டங்களுக்கு அடிக்கடி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சென்று வரும் அந்த பிரபல தொகுப்பாளினியை ஒரு பிரபல அரசியல்வாதி காமக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்தாராம்.

நிகழ்ச்சி முடிந்து தொகுப்பாளினி செல்லும் போது, சொன்ன பணத்துடன் கூடுதலான பணத்தை தொகுப்பாளினிக்குத் தர, அப்போதே அந்த அரசியல் பிரபலத்தின் மோசமான பார்வை மற்றும் தொடுதல் தொகுப்பாளினிக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

டாட்டா சுமோவுடன் தூக்க ரெடி: 

அதன் பின்னர், போன் நம்பரை கண்டுபிடித்து அந்த தொகுப்பாளினிக்கு ஆபாச சாட்டிங் செய்வதும், தனது கெஸ்ட் ஹவுஸுக்கு வரச் சொல்லுவதாக இருந்துள்ளார். தன்னை எப்படியோ அந்த அரசியல்வாதி அடையாம விடமாட்டான் என்பதை புரிந்து கொண்ட தொகுப்பாளினி, தனக்கு தெரிந்த இன்னொரு பிரபலமான கட்சி அரசியல் தலைவரிடம் இந்த மேட்டரை கொண்டு சென்றாராம்.

டாட்டா சுமோவுடன் தனது ஆட்களை வைத்து அந்த தொகுப்பாளினியை குண்டுக்கட்டாக தூக்கி வரச் சொல்லியே அந்த அரசியல்வாதி ஆர்டர் போட்டிருந்த நிலையில், தான் அர்ஜென்ட்டாக அந்த அரசியல் தலைவரை அணுகியிருக்கிறார் அந்த பாவப்பட்ட தொகுப்பாளினி.

கதறி அழுத தொகுப்பாளினி:

கடைசி நேரத்தில் உதவிக் கேட்டு வந்தாலும், உடனடியாக அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு தர நினைத்த அந்த அரசியல்வாதி, நேராக அந்த காமக் கொடூர அரசியல்வாதியிடமே போன் போட்டு அந்த பெண் வேண்டாம், விட்டு விடு.. அது நமக்கு வேண்டிய பெண் என்று சொன்னதும் விஷயம் வெளியே தெரிந்து விட்டதை அறிந்த அந்த அரசியல்வாதி அந்த பெண்ணை தூக்கத் துடித்துக் கொண்டிருந்த தனது ஆட்களை பின் வாங்க சொல்லி விட்டாராம்.

ஆனாலும், தொடர்ந்து அந்த அரசியல்வாதி தொகுப்பாளினி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களுக்கு எல்லாம் செல்வதும், இப்போ அவனுங்க கூடத்தான் இருக்கியான்னு அசிங்கமா கேட்பதாகவும் அந்த தொகுப்பாளினி சமீபத்தில் பிரபலம் ஒருவரிடம் சொல்லி கதறி அழுத நிலையில், இந்த தகவல்கள் வெளியே கசிந்துள்ளன.