Cinema News
லியோ க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்டதே திசைத்திருப்ப தான்.. அட இப்படி ஒரு உள்குத்து இருக்கா?
ஜெயிலர் இசை வெளியீட்டு விழா முடிந்த அடுத்த நாள், லியோ படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியானது. ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் நடந்த சுவாரசியமான விஷயங்களை பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டுவந்த நிலையில், க்ளிம்ஸ் வீடியோ வெளியானதும், பலரும் அந்த வீடியோவை பற்றி பேச தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இது வேண்டுமென்றே செய்யப்பட்ட விஷயம் தான், மக்களை திசைத்திருப்ப தான் இப்படி செய்கிறார்கள் என்று வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் கொண்டாட்டம் தொடங்கி ஒரு நாள் கூட முடிவதற்குள் லியோ க்ளிம்ஸ் வீடியோவை வெளியிடவேண்டுமா என்று தான் எனக்கு தோன்றியது. மக்கள் பார்வையை உடனே திரும்பிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு நாள் கழித்து வெளியிட்டிருக்கலாமே. இது முதல் முறை அல்ல, பல முறை இதே போல நடந்திருக்கிறது.
அஜித் ஒரு புகைப்படம் வெளியிட்டால், அடுத்த அரை மணி நேரத்தில் அல்லது சில மணி நேரத்தில் விஜய் பற்றி ஏதாவது அப்டேட் வெளியிடப்படுகிறது. அதை கொண்டாட தொடங்குவதற்கு முன்பே, அடுத்த அப்டேட் வந்ததும், இதை கொண்டாட தொடங்கிவிடுகின்றனர். அதே போல, விஜய் தரப்பிலிருந்து ஏதேனும் அப்டேட் விட்டால், அடுத்த சில மணி நேரத்தில் அஜித் தரப்பிலிருந்து, எதையாவது வெளியிடுகிறார்கள்.
இது ஏதோ போட்டிக்காக செய்வது போல இருக்கிறது. அந்த க்ளிம்ஸ் வீடியோ பார்க்க மிகவும் பிரமாதமாக இருந்தது. ஆனால், அதை அடுத்த நாளாவது வெளியிட்டிருக்க வேண்டும். ஜெயிலர் படம் குறித்து பெரிதாக பேசப்பட்டு வந்த உடனேயே, லியோ பற்றி பேச தொடங்கிவிட்டனர். எனவே இப்படி செய்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் இந்த சூப்பர் ஸ்டார் பிரச்சனை விஜய் மனசு வைத்தால் தான் முடியும், லியோ பட இசைவெளியீட்டு விழாவில், நீங்கள் கொடுத்த தளபதி பட்டமே எனக்கு போதும் என்று விஜய் ஒரு வார்த்தை சொன்னால், இந்த பஞ்சாயத்து மொத்தமாக முடிந்துவிடும் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.