Connect with us

Cinema News

விஜய்யை மட்டுமில்லை!.. அஜித்தையும் போற போக்கில சீண்டிய ரஜினிகாந்த்!.. போட்டு உடைத்த பிரபலம்!..

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்க்கு புத்தி புகட்டும் படி தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதை சொன்னார் என அஜித் ரசிகர்கள் பற்ற வைத்து குளிர் காய்ந்து வந்த நிலையில், அஜித்தையும் தான் போற போக்கில் ரஜினிகாந்த் சீண்டியிருக்கிறார் என வலைப்பேச்சு அந்தணன் லேட்டஸ்ட் வீடியோவில் பேசியுள்ளது அஜித் ரசிகர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா சர்ச்சை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ப்ளூ சட்டை மாறன், பயில்வான் ரங்கநாதன், வலைப்பேச்சு அந்தணன், பிஸ்மி, செய்யாறு பாலு என ஆரம்பித்து ஏகப்பட்ட யூடியூபர்களும் சினிமா விமர்சகர்களும் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்களை டிகோட் செய்தும், விஜய் பற்றித்தான் அவர் பேசியுள்ளார் என்றும் பொதுவாக பேசினார் என்றும் அப்படி பேசுவதை ரஜினிகாந்த் தவிர்த்து இருக்கலாம் என்றும் பல தரப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

காக்கா – கழுகு குட்டிக் கதை:

பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக அடிவாங்கினாலும், வசூல் ரீதியாக படம் ஹிட் என பேசிய நடிகர் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் டைட்டில் பற்றியும் பேசியிருந்தார். மேலும், வழக்கம் போல குட்டி கதை சொன்ன ரஜினிகாந்த் காகங்கள் கழுகை தொல்லை பண்ணும், ஆனால், கழுகு அதை கண்டுக் கொள்ளாமல் உயர பறந்து சென்று விடும்.

ஆனால், காகங்களால் உயர பறந்து வர முடியாது என ரஜினிகாந்த் சொன்ன குட்டிக் கதை நடிகர் விஜய்க்கான கதையாகத்தான் இருக்கு என பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் அஜித் குறித்தும் ரஜினிகாந்த் வம்பிழுத்து பேசியுள்ளார் என அந்தணன் கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவனை விரட்டி விட்ட அஜித்: 

நிறைய இளம் இயக்குநர்களிடம் கதை கேட்க ஆரம்பித்தேன். நெல்சன் சொன்ன கதை பிடித்துப் போன நிலையில், அந்த கதை பண்ணுவது என முடிவு பண்ணிவிட்டேன். ஆனால், அதன் பின்னரும் நிறைய இயக்குநர்கள் கதை சொல்ல அணுகினர். அவர்களை காக்க வைக்கக் கூடாது என்றும் அவர்களின் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்றும் நினைத்து ஜெயிலர் படத்தின் அறிவிப்பை வெளியிட்டோம்.

அதன் பின்னர், பீஸ்ட் வெளியானது அந்த படத்திற்கு நல்ல ரிவ்யூஸ் வரல, நெல்சனை வைத்து படம் பண்ணனுமா என விநியோகஸ்தர்களும் நெருக்கமான சில நண்பர்களுமே கேட்டனர். ஆனால், ஒரு இயக்குநரை கமிட் பண்ணிட்டு வேண்டாம்னு சொல்லிட்டா அவரோட லைஃப் வேஸ்ட்டா போகும். அதை செய்யக் கூடாதுன்னு ஓகே சொல்லிட்டேன் என ரஜினிகாந்த் பேசியது, விக்னேஷ் சிவனுக்கு வாக்குக் கொடுத்து விட்டு அஜித் வேண்டாம் என சொன்னதை குத்திக் காட்டவே ரஜினி அப்படி பேசினார் என அந்தணன் புட்டு புட்டு வைத்துள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top