ரூ.1.5 கோடி வரை சம்பளம்!.. சின்னத்திரையில் கெத்துகாட்டும் ‘எதிர்நீச்சல்’ மாரிமுத்து

Published on: August 1, 2023
marimuthu
---Advertisement---

எதிர்நீச்சல் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் மாரிமுத்து. இவர் ஏற்கனவே யுத்தம் செய், பரியேறும் பெருமாள், மருது, கூட்டத்தில் ஒருவன், சுல்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் கண்ணும் கண்ணும், புலிவால் என்ற 2 படங்களை தயாரித்துள்ளார். ஆனால் இவருக்கு பேரையும், புகழையும் தேடி தந்தது எதிர் நீச்சல் சீரியல் தான் என்றே கூறலாம். அந்த சீரியலில் இவர் நடிக்கும் ஆதி குணசேகரன் கேரக்டரில் இவர் கச்சிதமாக பொருந்தியிருப்பார்.

marimuth

சீரியலில் வில்லன் கதாப்பாத்திரம் இந்த அளவிற்கு பேசப்படுவது இது தான் முதல் முறை என்றே கூறலாம். மீம்ஸ்களிலும், சமூக வலைதளங்களிலும் ‘இந்தா மா ஏ’ என்ற வசனத்தின் மூலம் பிரபலமாகிவிட்டார் மாரிமுத்து. பார்க்க டெரராக இருக்கும் இவர், வாழ்க்கையில் 33 வருடங்கள் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். ஆரம்பத்தில் வெறும் 1500 ரூபாய் சம்பளத்திற்கு உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார்.

மேலும் சிம்புவின் மன்மதன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். கிட்டத்தட்ட 14 வருட காத்திருப்பிற்கு பிறகு பிரவுதேவாவை வைத்து முதல் படத்தை இயக்க தொடங்கியுள்ளார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கி 10  நாட்களில் அந்த படம் நின்றுவிட்டது. அதன் பிறகு பிரசன்னாவை வைத்து கண்ணும் கண்ணும் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தி படத்தில் வடிவேலு காமெடி ஹட்டானது. ஆனால் படம் சரியாக போகவில்லை.

Marimuthu

எனவே, வடிவேலுவை வைத்து ஒரு முழு நீள காமெடி படம் எடுக்க முடிவு செய்து, படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டார். அந்த படத்திற்கு கத்தி முனையில் கருப்பு சிங்காரம் என்று பெயரிடப்பட்ட அந்த படமும் நின்றுவிட்டது. தயாரிப்பாளருக்கும், வடிவேலுவிற்கும் இடையே ஏற்பட்ட சம்பள பிரச்சனையால் படம் நின்றுவிட்டது. அதற்கடுத்து அவர் எடுத்த பிரசன்னா, விமல், ஓவியா ஆகியோரை வைத்து புலிவால் என்ற படத்தை இயக்கினார். அந்த படமும் சரியாக ஓடவில்லை.

இதனால் மனமுடைந்து இருந்த மாரிமுத்துவை இயக்குநர் மிஷ்கின் யுத்தம் செய் படத்தில் நடிக்க அழைத்துள்ளார். அப்போது நடிக்க தொடங்கிய மாரிமுத்து, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து, தற்போது எதிர்நீச்சல் சீரியலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். ரூ.1500 சம்பளத்தில் தொடங்கி, தற்போது எதிர் நீச்சல் சீரியலுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

இதையும் படிங்க- இப்போ ரஜினி vs விஜய் தான்.. அஜித்லாம் கிடையாது!.. அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்த பிக் பாஸ் பிரபலம்!..

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.