Connect with us
vijayaanth

Cinema News

விஜயகாந்துடன் நடிக்க மறுத்த கார்த்திக்!.. அவருக்கு பதில் நடித்த பிரபல ஹீரோ!..

அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் கார்த்திக். இவர் பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் ஆவார். முதல் படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் இருந்தாலும் இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. இவர் நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாகும்.

இவருக்கு காதல் இளவரசன் என்கிற பட்டமும் கிடைத்தது. இளம்பெண்கள் பலரும் கார்த்திக்கின் ரசிகர்களாக இருந்தனர். அதற்கு காரணம் அழகாக இருப்பார்.. துள்ளலாக நடிப்பார் என்பதுதான். 90களில் இவரின் நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியானது. அதேநேரம், சரியாக படப்பிடிப்புகள் கலந்துகொள்ள வரமாட்டார் என்கிற புகாரும் இவர் மீது இருந்தது. மெல்ல மெல்ல அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. இந்த இடைவெளியில்தான் விஜய்,அஜித் போன்ற நடிகர்கள் மேலே வந்தனர்.

சுந்தர் சி போன்ற இயக்குனர்கள் இயக்கும் காமெடி படங்களில் கார்த்திக் நடித்து வந்தார். இவரின் நடிப்பில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாகும். அதன்பின் அந்த படம் போலவே நிறைய படங்கள் வெளிவந்தது. அவ்வப்போது சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார். இப்போது அவரின் மகன் கவுதம் கார்த்திக் சினிமாவில் நடித்து வருகிறார்.

விஜயகாந்த் நடித்து 2004ம் வருடம் வெளியான திரைப்படம் எங்கள் அண்ணா. இந்த படத்தில் கார்த்திக்கை நடிக்க வைக்க விஜயகாந்த் மிகவும் ஆசைப்பட்டாராம். ஆனால், சில காரணங்களால் கார்த்திக் நடிக்கவில்லை. எனவே, அவருக்கு பதில் பிரபுதேவா நடித்தார். இந்த படத்தில்தான் நமீதா அறிமுகமானார். மேலும், வடிவேலும், பாண்டியராஜன் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினியின் நெருங்கிய நண்பருக்கா இந்த நிலைமை? நடிகையின் லீலையால் சிக்கி உயிரிழந்த சம்பவம்

Continue Reading

More in Cinema News

To Top