Connect with us
rajini

Cinema News

அப்படி கூப்பிடாதீங்க ப்ளீஸ்!.. பலவருடங்களுக்கு முன்பே சொன்ன ரஜினி.. இவரயா அடிக்கிறீங்க!..

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சூப்பர்ஸ்டார் பட்டத்தை கையில் வைத்திருப்பவர் ரஜினி. ஆனால், கடந்த சில மாதங்களாகவே விஜய்தான் சூப்பர்ஸ்டார் என்கிற பேச்சு அல்லோலப்படுகிறது. அதற்கு காரணம் விஜயும் 100 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார். அவரின் படங்கள். நல்ல வசூலை பெறுகிறது. ரஜினிக்கு அவரின் கடைசி சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதனால்தான் இது துவங்கியது.

ஆனால், ஜெயிலர் விழா மேடையில் பேசிய ரஜினி ‘காக்கா ஒரு இடத்தில் இருக்காது. அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்கும். ஆனால், பருந்து அமைதியாக இருக்கும். காக்கா மேலே பறந்து போய் பருந்தை கொத்தினாலும் பருந்து காக்காவை ஒன்றும் செய்யாது. காக்கா பருந்து உயரத்திற்கு பறக்க ஆசைப்பட்டு முயற்சி செய்யும். ஆனால் கீழே விழுந்துவிடும்’ என பேச, அவர் விஜயைத்தான் மறைமுகமாக சொல்லியிருக்கிறார் என விஜய் ரசிகர்கள் பொங்கினார்கள்.

vijay

இந்த சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு பின்னாடி இருக்கும் கதையை தெரிந்துகொள்வோம்:

ரஜினியின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலை வாரிகுவித்ததால் அவருக்கு சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் கொடுக்கப்பட்டது. அதாவது வசூல் மன்னன் என்பதால் அந்த பட்டம். ஆனால், ரஜினிக்கு துவக்கம் முதலே அதில் விருப்பம் இல்லை என்பது பலருக்கும் தெரியாது.

இதையும் படிங்க: பார்க்கத்தான போற காளையோட ஆட்டத்த! அடுத்தடுத்து குறிவைத்து தாக்கும் ரஜினி – 170ல் இப்படி ஒரு டிவிஸ்டா?

இப்போது தயாரிப்பாளராக இருக்கும் கலைப்புலி தாணு 70களில் வினியோகஸ்தராக இருந்தர். பைரவி படம் வெளியான போதுதான் ரஜினிக்கு அந்த பட்டத்தை அவர் கொடுத்தார். அதுவும் அகில இந்திய சூப்பர்ஸ்டார் என சொன்னார். ஆனால், விஷயம் புரிந்து பதறிய ரஜினி ‘இது வேண்டாம். இப்படி எல்லாம் சொல்லாதீங்க’ என்றார். ஆனால் தாணுவோ ‘அகில இந்திய’ மட்டும் கட் பண்ணிடுறேன். ‘சூப்பர்ஸ்டார்’ என்பது இருக்கட்டும்’ என்றார். இப்படித்தான் ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் வந்தது.

Rajini

Rajini

ஆனால், எப்போதும் தன்னடக்கத்துடன் இருக்கும் ரஜினி 80களில் தான் நடிக்கும் படங்களில் தன்னை சூப்பர்ஸ்டார் என போடவேண்டாம் என இயக்குனர்களிடம் சொல்லிவிடுவார். அதேபோல், அப்போது வெளிவந்த பத்திரிக்கைகளிலும் என்னை சூப்பர்ஸ்டார் என எழுத வேண்டாம் என ரஜினியே போன் போட்டு சொல்வாராம். ஒருகட்டத்தில் அவராலேயே அதை தடுக்க முடியவில்லை. அதேநேரம், நான் சூப்பர்ஸ்டார் என அவர் எந்த இடத்திலும் பேசியதே இல்லை. மேலும் ‘இந்த சூப்பர்ஸ்டார் பட்டம் வந்த பின் நிறைய வெறுப்புகளை பார்த்திருக்கிறேன். அந்த வெறுப்பு நெருப்பில் வளர்ந்தவன் நான்’ ரஜினி எப்போதும் சொல்வாராம்.

இதுதான் ரஜினியின் உண்மையான குணம். ஜெயிலர் மேடையில் ‘இந்த சூப்பர்ஸ்டார் பட்டத்த வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே’ என சிரித்துக்கொண்டே அவர் பேசியதன் பின்னணி இதுதான். தன்னுடைய படங்கள் வெற்றி பெற்று தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே ரஜினியின் எண்ணமாக இருந்திருக்கிறது. இன்னமும் இருக்கும். அதனால்தான் அவர் சூப்பர்ஸ்டார் என ரஜினி ரசிகர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது.

இதையும் படிங்க: விஜய் யாருன்னு தெரியுமா?.. ரஜினி சொன்ன கதைக்கு அப்பவே பதில் சொன்ன உலக நாயகன்..

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top