விஜயை நம்பி விழிபிதுங்கி நிற்கும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்! தளபதியின் கணக்கே வேற..

Published on: August 7, 2023
vijay
---Advertisement---

விஜயை வைத்து எப்படியாவது தனது 100 வது படத்தை எடுத்துவிட வேண்டும் என்ற லட்சியத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் ஒரே குறிக்கோளுடன் இருந்து வருகிறது. ஏற்கெனவே விஜயை வைத்து லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், பூவே உனக்காக, ஜில்லா, ஷாஜகான், திருப்பாச்சி போன்ற பல வெற்றிப்படங்களை எடுத்தது.

அதுமட்டுமில்லாது விஜயின் கெரியரையே மாற்றிப் போட்ட நிறுவனமாக சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் விளங்கியது. பூவே உனக்காக படத்தில் யாரை போடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில் விஜய் சரியாக இருப்பார் என அந்த நிறுவனத்தின் பரிந்துரையின் படிதான் விஜய் நடிக்க வந்தார்.

இதையும் படிங்க : கிடைக்கிற கேப்பையும் வீணாக்காத சிம்பு! புதிய கெட்டப்புக்கான காரணம் இப்போதான் புரியுது

அந்தப் படத்தின் வெற்றி விஜயின் மார்க்கெட்டை எங்கேயோ கொண்டு சென்றது. அந்த நன்றிக்கடன் தான் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிக்கிறேன் என்று சொல்லியிருந்தாராம். அதுவரை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தனது 99வது படம் வரை மற்ற மொழிகளில் தயாரிக்கலாம் என்ற யோசனையில் தெலுங்கு பக்கம் சென்றிருக்கிறது.

இந்தப் பக்கம் மிகப்பெரிய நிறுவனமான சன் பிக்சர்ஸ் 200 கோடி சம்பளம் தருகிறேன், அடுத்தப் படத்தில் நடிக்க வாங்க என்று கூப்பிட்டால் அவர்களையே காத்திருப்பு பட்டியலில் வைத்திருக்கிறாராம் விஜய். லியோ படத்திற்கு ஒரு பெரிய தொகையாக சம்பளம் பெற்றிருக்கும் விஜய் ஒரு வேளை லியோ படம் எண்ணமுடியாத வெற்றிப் பெற்றால் விஜயின் சம்பளம் 200லிருந்து 250 கோடியாக உயர வாய்ப்பிருக்கிறது என்று கோடம்பாக்கம் கூறுகின்றது.

இதையும் படிங்க : இந்தா ஏய்.. இனிமே அவ்ளோதான்! எதிர்நீச்சலின் கொட்டத்திற்கு சரியான முடிவு – இப்படி ஆயிடுச்சே

இப்படி பல கோடிகளில் புரளும் விஜயை வைத்து இவ்ளோ தொகையை கொடுத்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் படம் தயாரிக்க முன்வருமா என்ற சந்தேகமும் இருக்கின்றது. ஆர்மபத்தில் 125 கோடி வரை கொடுக்க தயார் என்று சொல்லியிருந்ததாம். ஆனால் விஜயின் சம்பளம் இப்போது அதைவிட டபுளாக உயரும்  போது என்ன செய்யப் போகின்றது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் என பேசி வருகிறார்கள்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.