Connect with us
simbu

Cinema News

கிடைக்கிற கேப்பையும் வீணாக்காத சிம்பு! புதிய கெட்டப்புக்கான காரணம் இப்போதான் புரியுது

கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தோடு வலம் வருபவர் நடிகர் சிம்பு. ஆரம்பகாலத்தில் இருந்த சிம்புவுக்கும் இப்போது இருக்கும் சிம்புக்கு ஏராளமான மாற்றங்கள் கண்கூடாகவே தெரிகின்றன. சார்மிங்காக ப்ளே பாயாக இருந்து வந்த சிம்பு இப்போது ஒரு முழு ஆன்மீகவாதியாகவே மாறிய தோற்றம்.

உண்மையில் யோகா, பல கலைகளுக்கான பயிற்சியை  கற்று ஆன்மீகத்திலும் முழு ஈடுபாட்டுடன் இருந்து வருகிறார். ஒரு பக்கம் தன் பெற்றோரை பத்திரமாக பாதுகாப்பத்தில் கவனமாக இருந்து வருகிறார். மாநாடு, வெந்து  தணிந்தது காடு, பத்து தல என வரிசையாக அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து வந்தார் சிம்பு.

இதையும் படிங்க :இந்தா ஏய்.. இனிமே அவ்ளோதான்! எதிர்நீச்சலின் கொட்டத்திற்கு சரியான முடிவு – இப்படி ஆயிடுச்சே

ஆனால் திடீரென ஒரு சறுக்கு. ஐசரி  கணேசனுடன் ஒரு சிறிய கருத்துவேறுபாட்டால் சில பல பிரச்சினைகள் ஏற்பட்டு இப்போது தான் முடிவுக்கு வந்தது. அதனை அடுத்து வரும் படங்களில் அவரை பார்க்க முடியும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. அதற்கான வேலைகள் தான் இப்போது போய்க் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று சிம்புவின் ஒரு புதிய லுக் புகைப்படம் வெளியானது.

இதையும் படிங்க : வாண்டடா போய் வம்ப விலைக்கு வாங்குறது.. அஜித்தை வச்சு பண்றதெல்லாம் ஒரு விஷப்பரீட்சை!

படு ஸ்டைலான லுக்கில் மாஸாக இருந்தார். ஒரு வேளை அது அடுத்தப் படத்திற்கான கெட்டப்பாக இருக்கலாமோ என்று எதிர்பார்த்திருந்த நிலையில் சிம்பு ஏதோ ஒரு விளம்பரப்படத்தில் நடிக்கிறாராம். அதற்கான ஷூட்டிங்தான் நேற்று நடந்திருக்கிறது.

அதாவது ஏற்கெனவே ஒரு வாசனை திரவியத்திற்கான விளம்பரத்தில் நடித்தார். அதே போல் அடுத்ததாக அபி பஸ் என்ற நிறுவனத்திற்காக நடித்தாராம். ரெட் பஸ் என்ற ஒரு ஆப்பை போல் அபி பஸ் என்ற செயலியும் இருக்கிறதாம். அதற்காகத்தான் நடித்தாராம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top